06 பிப்ரவரி 2022, தற்போது, சினிமா துறையில் அதிகம் பேசப்பட்டு வரும் திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்ததுதான் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களின் விவாகரத்தாகும்.

இருவரும் அதனை மனப்பூர்வமாக அவர்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்த நிலையில், விவாகரத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது அன்றாட வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்குனர் என்பதால் அவரது அன்றாட செயல்பாடுகளில் தனது கவனத்தை செலுத்தி வந்தார். மேலும், அவர் யோகா கலையின் மீது அதிக நாட்டம் கொண்டவர் என்பதால் அதனிலும் தனது முழு கவனத்தை செலுத்தி வந்தார்.
கொரோனாவிற்கு குட் பை
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பால் பாதிக்கப்பட்டு தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு, தற்போது மீண்டும் அவரது அன்றாட வேலைகளுக்கு திரும்பியுள்ளார்.
இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தற்போது கொரோனாவிலிருந்து மீண்டு வரும் ஐஸ்வர்யா படுக்கையில் அமர்ந்தபடியே, ஆர்வமோடு எழுதுவது போல் அவரது ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில், "வொர்க் ஆன் ப்ரோசஸ்" என்கிற கேப்ஸானோடு ஸ்டோரி பதிவிட்டுள்ளார்.
Also Read: அச்சோ! ரசிகர்கள் ஷாக்.. "இந்த வருஷம்தான் கடைசி.. இனி நடிக்க மாட்டேன்" - பிரபல நடிகர்!