வெங்கட் பிரபு, பிரேம்ஜி GANG-ல இந்த சென்சேஷனல் இயக்குநரா?.. "தீயாய் பரவும் ஒற்றை புகைப்படம்!"..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘தல’ அஜித் குமார் நடிப்பில் இயக்குனர் H.வினோத் இயக்கி வரும் திரைப்படம் ‘வலிமை’.

இந்த திரைப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ஏகோபித்த திரைப்பட ரசிகர்களால் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி வைரலாகின.

நீண்ட நாட்களாக வலிமை அப்டேட்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு அடுத்தடுத்த ட்ரீட் வைக்கும் விதமாக வலிமை சிங்கிள் பாடலும் பின்னர் வெளியானது. ‘நாங்க வேற மாதிரி’ என்கிற இந்த பாடல் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகி வெளியானது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தின், அடுத்த சிங்கிள் பாடலும் விரைவில் வந்து கொண்டே இருப்பது பற்றி இயக்குநர் வெங்கட் பிரபு அண்மையில் குறிப்பிட்டிருந்தார். முன்னதாக‘வலிமை’ திரைப்படத்தில் ஒரு அம்மா சென்டிமென்ட் பாடலும், ஒரு குத்துப் பாடலும் இருக்கும் என்று யுவன் ஷங்கர் ராஜா குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரேம்ஜி அமரன், வைபவ் உள்ளிட்ட, இயக்குனர் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான டீமுடன், இயக்குநர் H.வினோத் கோயிலில் தரிசனம் செய்யும் வைரலான புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது.

நடிகர் பிரேம்ஜி அமரன் தற்போது தமிழ் ராக்கர்ஸ் என்கிற திரைப்படத்தில் இசையமைத்து நடித்து வருகிறார். இதேபோல் நடிகர் வைபவ் அண்மையில் ‘மலேஷியா டூ அம்னீஷியா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். ராதாமோகன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் Zee 5 ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

இயக்குனர் வெங்கட் பிரபுவை பொறுத்தவரை,  ‘தல’ அஜித்தை ‘மங்காத்தா’ திரைப்படத்தில் இயக்கியவர். தற்போது நடிகர் சிம்புவின் நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படத்தை இயக்கி உள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், இப்படத்தின் 2-வது சிங்கிள் பாடல் விரைவில் வந்து கொண்டிருப்பதாகவும் வெங்கட் பிரபு அண்மையில் குறிப்பிட்டிருந்தார். 

Also Read: "அவன் - இவன்" பட சர்ச்சை.. இயக்குநர் பாலா மீதான வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

தொடர்புடைய இணைப்புகள்

H.Vinoth with venkat prabhu premgi amaren in temple viral pic

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Premgi Amaren, ThalaAjith, Trending, Vaibhav, Venkat Prabhu, Viral will find this news story useful.