ஹிர்த்திக் ரோஷன் நடிக்கும் விக்ரம் வேதா இந்தி ரீமேக்.. டீஸர் குறித்து வெளியான சூப்பர் தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

Advertising
>
Advertising

Also Read | விஜய் தேவரகொண்டா நடிக்கும் LIGER படத்தின் ரிலீஸ்.. அனன்யா பாண்டே நடத்திய போட்டோஷூட்!

இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது. நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியாகி இருந்தது. பின் பிப்ரவரி 24-ல் விக்ரம் கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியானது.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என தற்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டீஸர் இந்தி சினிமா பிரபலங்களுக்கு திரையிடப்பட்டது. திரையிடல் நிகழ்வில் டீஸரை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் டீஸர் குறித்து தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்த கருத்துக்களை ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது.

இந்த நிகழ்வில் இயக்குனர் புஷ்கர் மற்றும் காயத்ரி, நடிகர் ஹிருத்திக் ரோஷனுடன் கலந்து கொண்டனர்.

 

Also Read | நடிகையை திருமணம் செய்த சூரரைப் போற்று ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி ரெட்டி.. கல்யாண போட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik Roshan Vikram Vedha Teaser Premier Show

People looking for online information on Hrithik Roshan, Hrithik Roshan Vikram Vedha Teaser, Vikram Vedha Hindi Remake will find this news story useful.