ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகான் நடிக்கும் "விக்ரம் வேதா".. TRAILER ரிலீஸ் எப்போ? புது போஸ்டர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் உருவாகும் விக்ரம் வேதா படத்தின் டிரெய்லர் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | PS1: "பொன்னியின் செல்வன்".. வெளியான மற்றொரு வில்லனின் தெறி லுக்!

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்த படத்தை இந்தியில் க்ஷ இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கி உள்ளனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர்.

தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

ஏற்கனவே இந்த படத்தின் முதல் லுக் வெளியாகி உள்ளது. நடிகர் ஹிர்த்திக் ரோஷனின் 48 வது பிறந்தநாளை முன்னிட்டு "வேதா" கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியாகி இருந்தது. பின் பிப்ரவரி 24-ல் விக்ரம் கதாபாத்திரத்தின் முதல் லுக் வெளியானது.

இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும்  செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் வரும் செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அறிவித்துள்ளது. ஆக்சன் புகைப்படங்களுடன் இந்த போஸ்டர் அமைந்துள்ளது.

Also Read | சுந்தர் C இயக்கும் 'Coffee with காதல்'.. ரிலீஸ் எப்போ? தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik Roshan Vikram Vedha Movie Trailer Release Update

People looking for online information on Hrithik Roshan, Hrithik Roshan Vikram Vedha Movie, Vikram Vedha, Vikram Vedha Hindi Movie, Vikram Vedha Movie Trailer will find this news story useful.