VIKRAM VEDHA: ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகானின் மாஸ் ஆக்சன் காட்சிகள்.. வெளியான சூப்பர் டிரெய்லர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் வேதா படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | 'திருச்சிற்றம்பலம்' 'எமோஷனல்' சீனை வேற லெவலில் Sync செய்த ரசிகர்கள்! PBS பகிர்ந்த VIDEO!

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் தமிழில் வெளியான படம் 'விக்ரம் வேதா'.

இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார்.

இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி அதற்கான பூர்வாங்க வேலைகளை சில ஆண்டுகளுக்கு முன் துவங்கினர். இந்தியில் புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடித்துள்ளனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். சாம் CS இப்படத்திற்கு இசையமைப்பாளராக பணிபுரிகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என  தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிலநாட்களுக்கு முன் படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. "நன்மை, தீமைக்கு அப்பாற்பட்ட, கருப்பு வெள்ளை நிறத்திற்கு அப்பாற்பட்ட சாம்பல் பகுதி" என்ற வாசகத்துடன் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

டிரெய்லர் முழுவதும் கருப்பு வெள்ளை பிண்ணனி பாடல் மற்றும் இசை அமைந்துள்ளது. ஆக்சன் காட்சிகளுடன் செம மாஸ் வசன காட்சிகளும் டிரெய்லரில் முக்கிய அம்சமாக அமைந்துள்ளன.

Also Read | சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம்.. மோஷன் போஸ்டர் எப்போ? மாஸ் அப்டேட்!

VIKRAM VEDHA: ஹிருத்திக் ரோஷன் & சயிப் அலிகானின் மாஸ் ஆக்சன் காட்சிகள்.. வெளியான சூப்பர் டிரெய்லர்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik Roshan Vikram Vedha Movie Hindi Trailer Released

People looking for online information on Hrithik Roshan, Saif Ali Khan, Vikram Vedha, Vikram Vedha Movie Hindi Trailer will find this news story useful.