“OOPS”… விக்ரம் வேதா ஷூட் OVER… புது GETUP-க்கு மாறிய ஹ்ரித்திக் ரோஷன் … VIRAL PIC

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் தன்னுடைய புதிய புகைப்படத்தை பகிர, அது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் T ராஜேந்தர்… சந்தித்து நலம் விசாரித்த கமல்… latest pic

விக்ரம் வேதா…

2017ல் இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில், Y Not Studio சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

ரீமேக்…

விக்ரமாக மாதவனும், வேதாவாக விஜய் சேதுபதியும் நடித்தனர். இப்படத்திற்கு சாம் C.S இசையமைத்திருந்தார். பிரபல ஒளிப்பதிவாளர் P S வினோத் ISC தமிழில் ஒளிப்பதிவு செய்து இருந்தார். இந்த படத்தை இந்தியில் இயக்க இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தனர். புஷ்கர் - காயத்ரி இயக்கும் இந்தப் படத்தில் 'விக்ரம்' மாதவன் கதாபாத்திரத்தில் சயிப் அலி கானும், 'வேதா' விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷனும், ஷ்ரதா ஸ்ரீநாத் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தேவும், கதிர் கதாபாத்திரத்தில் ரோஹித் சரவும் நடிக்கின்றனர். தமிழில் ஒளிப்பதிவு செய்த P S வினோத்தே இந்தியிலும் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தியிலும் இந்த படத்தின் பெயர் விக்ரம் வேதா என்றே வைக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு…

இந்த படத்தின் படப்பிடிப்பு  (15.10.2021) அன்று துபாயில் தொடங்கியது. விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கை தமிழில் தயாரித்த Y Not ஸ்டுடியோஸ் உடன் இணைந்து, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், குல்சன் குமாரின் டி-சீரிஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி இந்தப் படம் இந்தியில் வெளியாகவுள்ளது என தற்போது தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Handsome look-ல் ரோஷன்…

இந்நிலையில் இந்த படத்தின் வேதா கதாபாத்திரத்துக்காக ஹ்ரித்திக் ரோஷன் பல நாட்களாக தாடி மற்றும் நீண்ட தலைமுடி கெட்டப்பொடு காணப்பட்டார். இப்போது படப்பிடிப்பு முடிந்ததும் புதிய கெட்டப்புக்கு மாறியுள்ளார். அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர, அது வைரலாகி வருகிறது.

Also Read | BGM 8: “ஒரு நாள் நீ கண்டிப்பா புரிஞ்சுக்குவ… இப்போ புரியுது”… செல்வராகவனிடம் சொன்ன தனுஷ்

தொடர்புடைய இணைப்புகள்

Hrithik roshan new getup after vikram vedha shoot

People looking for online information on Hrithik Roshan, Hrithik roshan new getup, Vikram vedha shoot will find this news story useful.