ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டா ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவர்களுள் மக்களை கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இதற்கு அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப்படுவதாக கமல் அறிவித்தார். அதன்பிறகு அடுத்த வாரத்தில் ஷெரினாவை மலையாளத்தில் எழுதப்பட்ட பெயர் கார்டை காண்பித்து அவர் எலிமினேட் ஆவதாக கமல்ஹாசன் அறிவித்திருந்தார். அதன் பின்னர் மகேஸ்வரி எலிமினேட் ஆனார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார். கடந்த வாரத்தில் நிவாஷினி எலிமினேட் ஆகியிருந்தார்.
இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸில் ஷகிலாவுடனான நேர்காணலில் மனம் திறந்த நடிகையும், முந்தைய சீசன் பிக்பாஸ் போட்டியாளருமான வனிதா, “நான் பிக் பாஸில் இருக்கும் போது ராபர்ட் திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்யும் பொழுது அவருடைய மனைவிக்கு ஒரு குழந்தை இருந்தது. நான் வெளியே வந்த பிறகு, இது பற்றி என்னிடம் கேட்டார்கள். ராபர்ட் மற்றும் அவருடைய மனைவி என்னை பற்றி பேசி இருந்தது குறித்தும் என்னிடம் கேட்டிருந்தார்கள். ராபர்ட்டோ இன்னும் தப்பாக பேசி இருந்தார் என்று சில நெருக்கமான, அக்கறை கொண்டவர்கள் குறிப்பிட்டார்கள்.
அதன் பிறகு ஒரு திரைப்படத்தில் நடிப்பது குறித்து ராபர்ட் என்னிடம் பேச, நான் நடிக்கிறேன் என்று சொன்னேன். இதைத் தொடர்ந்துதான் பிக் பாஸில் அவர் கலந்து கொள்வது குறித்து என்னிடம் கேட்டார். நல்ல விஷயம் தான்... உனக்கு திறமை இருக்கிறது.. சரியான தளம் அமையவில்லை. இதை பயன்படுத்திக் கொள் என்றேன். அப்போது உன்னால் இது விஷயமாக பேச முடியுமா என்று என்னை ராபர்ட் கேட்டார். நிச்சயமாக என்று சொல்லி விஜய் டிவி பிரதீப்பிடம் புகழ் திருமணத்தில் சந்தித்து நான் பேசினேன். அவரே ஒரு நிமிடம் குழம்பி நின்றார். நான் ராபர்ட்டுக்காக பேசுகிறேனா என்று ..
அப்படி எல்லாம் பேசி இன்று பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் சென்று இருக்கிறார். அப்பொழுதும் நான் கேட்டேன், நீ வெளியில் இப்படி பேசி வைத்திருக்கிறாய்.. உள்ளே சென்றால் உன் மனைவி, பிள்ளைகள் உள்ளிட்ட பல கேள்விகள் எழும். நீ எப்படி பேசுவாய்? சமாளிப்பாய்? என்று கேட்டிருந்தேன். ஆனால் இப்போது எனக்கு அவர் பண்ணுவது மிகவும் அவமானமாக இருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் இருப்பது எவ்வளவு பெரிய வாய்ப்பு? கமல் சார் இதை பலமுறை கூறி நினைவுபடுத்துகிறார். எனக்கெல்லாம் பிக்பாஸ் மிகப்பெரிய வாய்ப்பு. அதன் மதிப்பும் எனக்கு தெரியும். என்னுடைய வாழ்க்கையை பிக் பாஸ் மிகவும் மாற்றியது. அப்படி ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அவர் பயன்படுத்திக் கொள்ளாமல் தனக்குத்தானே கெடுதல் செய்து கொள்கிறார். இதை பார்ப்பவர்கள் எனக்கு நானே சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டதாக கூறுகின்றனர்” என்று சொல்லி சிரிக்கிறார்.
Also Read | "ரொம்ப நம்புனேன்.. பிக்பாஸ் கேமரா முன் நின்னு அவன் பேசுனது" - ராபர்ட்டின் Transformation குறித்து வனிதா