அட பாவத்த.. ஜாக்குலின் செல்லத்த இவ்வளவு கலர் கலரா கதை சொல்லி நம்பவச்சிருக்காரா சுகேஷ்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் இந்தியில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இலங்கையை சேர்ந்த இவர் முதலில் மாடலிங் செய்து வந்தார். அதன்பின் 2009ஆம் ஆண்டு வெளியான "அலாவுதீன்" படத்தின் மூலம் அறிமுகி அதன்பின் நிறைய படங்களில் ஒப்பந்தமாகி ஒரு முன்னணி கதாநாயகியாக இந்தி சினிமாவில் இருக்கிறார். இந்நிலையில், சுகேஷ் என்பவர் 500 கோடி பட்ஜெட்டில் ஒரு படம் செய்யப்போவதாக ஜாக்குலின் பெர்னாண்டசை ஏமாற்ற முயன்றது தெரியவந்துள்ளது.

Advertising
>
Advertising

பிரபல தொழிலதிபராக கருதப்படும் சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு மோசடி வழக்குகளில் கைதானவர். 2007 ஆம் ஆண்டு தனது குடும்பத்தில் உள்ள நெருங்கிய நண்பரிடம் மோசடி செய்து சிறைக்கு சென்றவர். அதன்பின் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டு பல மோசடி வழக்குகளிலும் மீண்டும் கைது செய்யப்பட்டார். 

அதன் பின் வெளிவந்த இந்த தகவல் பாலிவுட் நடிகையான  ஜாக்குலின் பெர்னாண்டசை தனது வலையில் வீழ்த்துவதற்காக பழகியதாக கூறப்படுகிறது. முதலில் அவர் மனதில் இடம் பிடிப்பதற்காக விலையுயர்ந்த கார்கள், பரிசுப் பொருட்கள் மற்றும் குதிரையை வழங்கிய இவர், அதன் பின் இன்னொரு வாக்குறுதியும் கூறி ஈர்த்துள்ளதாக பல பரபர தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் 500 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுப்பதாகவும் அதில் முழுக்க முழுக்க ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்படும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டாக இருக்கும் என கூறி வாக்குறுதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் இவர், பல மோசடிகளில் ஈடுபட்டு இதுவரை 200 கோடி ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்தாக மத்திய அமலாக்கத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் டெல்லி அமலாக்கத்துறை சுகேஷ் சந்திரசேகரின் வீடு மற்றும் பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதில் 20 சொகுசு கார்கள், லேப்டாப் மற்றும் கட்டுக்கட்டாக பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், சுகேசும் ஜாக்குலினும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஜாக்குலினை இதுவரை நான்கு முறை நேரில் சந்தித்திருப்பதாக தகவல் வந்துள்ளது. அதாவது, ஜாக்குலின் அதிக படங்களில் ஒப்பந்தம் ஆகாமல் இருந்ததை அறிந்த சுகேஷ் தனது வலையில் விழ வைக்க 500 கோடி பட்ஜெட்டில் படம் எடுப்பதாக கூறி அதில் உனக்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்றை தருவதாகவும் கூறி, அந்தப்படத்தின் பட்ஜெட்டையும் ஜாக்குலினிடம் காட்டியதாகவும் தெரிகிறது.

How Jacqueline fernandez got cheated by sukesh chandrasekhar

People looking for online information on சுகேஷ் சந்திரசேகர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், Jacqueline Fernandez, Sukesh chandrasekhar will find this news story useful.