பிக்பாஸ் வீட்டில் தற்போது டிக்கெட் டூ பினாலே டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் அதிக மதிப்பெண் பெற வேண்டும் என போட்டியாளர்கள் வெறித்தனமாக டாஸ்க் செய்து வருகின்றனர். என்றாலும் கூட பிக்பாஸ் தொடர்ந்து சுவாரஸ்யம் குறைவாக உள்ள டாஸ்குகளை அளித்து வருவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று இரண்டு டாஸ்குகள் அளிக்கப்பட்டன. இதில் முதல் டாஸ்க்கில் ஆரி எளிதாக விட்டுக்கொடுத்து விட்டார். பாலாஜி அவர் ஓட முடியாமல் குறுக்கே சில பொருட்களை போட்டு வைத்ததால் அதிருப்தியில் ஆரி அவ்வாறு செய்து விட்டார். தொடர்ந்து இரண்டாவதாக பாட்டு டாஸ்க் அளிக்கப்பட்டது. அதிலும் ஆரி பெரிதாக எதுவும் செய்யவில்லை.
என்றாலும் கூட கடைசியில் 17 பாயிண்டுகளை அவர் பெற்று இருக்கிறார். தற்போது பாலாஜியும் அதே மதிப்பெண்கள் பெற்று இருவரும் சமமான இடத்தை பிடித்துள்ளனர். இதைப்பார்த்த ரசிகர்கள் ரூல்ஸ் புக்கை எங்க அண்ணன் சரியா படிச்சு ஸ்கோர் பண்ணிட்டாரு. இதான் அவரோட ஸ்ட்ராட்டஜி என பாராட்டி வருகின்றனர்.