கமல் ஹாசன் வச்ச TASK.. போட்டியாளர்கள் எல்லோரும் நெகிழ்ந்து போய்ட்டாங்க.. இன்றைய பிக்பாஸில்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் ஜனனி மற்றும் தனலட்சுமி ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தனர்.

Housemates shares Luck chain to each other in BB House
Advertising
>
Advertising

கடந்த வாரம், பிக் பாஸ் வீட்டில் Freeze டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்க்கில் மீதமுள்ள 9 போட்டியாளர்களின் பெற்றோர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோர் வருகை தந்தனர். முந்தைய வார டாஸ்க்கிற்கு மத்தியில் குடும்பத்தினர் குறித்து பேசியும், கடிதங்கள் எழுதியும் நிறைய போட்டியாளர்கள் கண் கலங்கி போயிருந்தனர்.

Housemates shares Luck chain to each other in BB House

அப்படி ஒரு சூழலில், இந்த வாரம் தங்களின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டில் வருகை தருவது அனைத்து போட்டியாளர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மைனா நந்தினியின் கணவர் யோகேஷ் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் வருகை தந்திருந்தனர். இதே போல ஷிவினின் நண்பர்கள் அங்கே வந்திருந்தனர். இது தவிர அமுதவாணன் மனைவி மற்றும் குழந்தைகளும், பின்னர் மணிகண்டா ராஜேஷை பார்க்க அவரது தாய், மனைவி, குழந்தை மற்றும் நடிகையும், சகோதரியுமான ஐஸ்வர்யா ராஜேஷூம் பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்திருந்தனர்.

அதே போல ரச்சிதாவை பார்க்க, அவரது தாய் மற்றும் சகோதரர் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தனர். இதே போல, ஏடிகேவை பார்க்க அவரது தாய் மற்றும் தந்தை ஆகியோர் உள்ளே வந்திருந்தனர். விக்ரமன் மற்றும் கதிரவனின் பெற்றோர்கள், அசிமின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உள்ளிட்டோரும் பிக்பாஸ் வீட்டில் வருகை தந்தனர்.

மேலும் பிக் பாஸ் வீட்டில் வருகை தரும் போட்டியாளர்களின் குடும்பத்தினர், ஹவுஸ்மேட்ஸ் குறித்தும் நிறைய விஷயங்களை பேசி வருகின்றனர். தங்களின் பேவரைட் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும், எப்படி அவர்கள் கேம் ஆடுகிறார்கள் என்பது பற்றியும் தங்களது கருத்துக்களை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.

இந்நிலையில், வார இறுதி என்பதால் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியில் பங்கேற்று போட்டியாளர்களுடன் உரையாடி வருகிறார். அப்போது, போட்டியாளர்களிடம் ஒரு செயின் கொடுக்கப்படுகிறது. அதில், மணிகண்டாவிடம்,"இந்த பொருளை விட இந்த உறவு முக்கியம் என நீங்கள் நினைக்கும் நபருக்கு கொடுங்க" என்கிறார் கமல்ஹாசன். மணிகண்டா அந்த செயினை விக்ரமனிடத்தில் கொடுக்கிறார். பின்னர் ADK மணிகண்டாவுக்கு கொடுக்கிறார். அப்போது பேசும் ADK,"இந்த வீட்டை விட்டு வெளியே போனாலும் மணிகண்டா கூட பழகணும்னு ஆசைப்படுறேன் சார்" என்கிறார்.

இதனையடுத்து, கதிரவனுக்கு செயினை கொடுக்கும் விக்ரமன்,"பிறரது பிரச்சனைகளுக்காகவும் அநீதிகளுக்கு எதிராகவும் அவர் நிற்கணும்னு ஆசைப்படுறேன்" என்கிறார். அதைத் தொடர்ந்து பேசும் மைனா,"இந்த வீட்டின் சூப்பர் ஸ்டார் என எனக்கு ஒன்னு கொடுத்தாங்க. என்னைப் பொறுத்தவரையில் இந்த வீட்டுக்கு மட்டும் இல்ல, அவ தமிழக மக்கள் அனைவர்க்கும் சூப்பர் ஸ்டார் தான். அதுனால ஷிவினுக்கு இந்த செயினை கொடுக்குறேன்" எனச்சொல்லிவிட்டு ஷிவினிடம் கொடுக்கிறார். இதனால் ஷிவின் நெகிழ்ந்து போகிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Housemates shares Luck chain to each other in BB House

People looking for online information on ADK, Biggboss6Tamil, Shivin, Viraman will find this news story useful.