கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாடகர் எஸ்பிபி குறித்து மருத்துவமனை அறிக்கை

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனது காந்த குரலால் பல தலைமுறை இசை ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் பாடகர் எஸ்பிபி. சமீபத்தில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தனக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தான் நன்றாக இருப்பதாகவும், சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்து விடுவேன் என்றும் அதனால் ரசிகர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். அவரது பேச்சு ரசிகர்களுக்கு சற்று ஆறுதலை அளித்திருந்தது.

இந்நிலையில் அவர் அனுமதிக்கப்பட்டுளள்ள மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், எஸ்.பி.பாலசுப்ரமண்யத்திற்கு தற்போது லேசான கொரோனா வைரஸ் அறிகுறிகள் இருந்ததாகவும், ஆக்ஸிஜன் செறிவு நார்மலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் உயர்மட்ட மருத்துவக்குழு கண்காணித்து வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Hospital's statement about singer SP Balasubrahmanyam's health condition | பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை குறித்து மருத்துவமனை அ

People looking for online information on Coronavirus, Covid 19, SP Balasubramaniam, SPB will find this news story useful.