KGF நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்…. சர்ப்ரைஸ் UPDATE– கொண்டாடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

KGF படங்களின் தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட கதாநாயகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "டாக்டர்" பட பிரியங்கா மோகன், அடுத்து நடிக்கும் படத்தில் இந்த முன்னணி ஹீரோவுக்கு ஜோடியா?

KGF கொடுத்த ஹோம்பலே பிலிம்ஸ்…

ஹோம்பாலே பிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த திரைப்படம் 'கே ஜி எஃப் சாப்டர் 2’. இந்த படம் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி 10,000 திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியானது. இந்த படம் நான்கு நாட்களில் 546 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் 1000 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேஜிஎஃப் 1 & 2 படங்களின் மூலம் ஹோம்பாலே நிறுவனம் இந்தியா முழுவதும் அறியப்பட்ட தயாரிப்பு நிறுவனமாகியுள்ளது. இந்த படங்களுக்குப் பிறகு அடுத்து பிரபாஸ் நடிப்பில் சலார் மற்றும் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் என அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு இந்திய சினிமா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டி வருகிறது.

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அறிவிப்பு…

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 26) ஒரு சூப்பர் எக்ஸைட்டிங் அப்டேட்டை ஹோம்பலே நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் “நாளை காலை 9.50 மணிக்கு மிகப்பெரிய அறிவிப்பு. வெள்ளித்திரையில் ஒரு புதிய சகாப்தம் பற்றிய அறிவிப்பு.” எனக் கூறி எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளார். அதையடுத்து இந்த எதிர்பார்ப்புக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் தற்போது அந்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மூன்றாவது தலைமுறை நடிகர்…

கன்னட சினிமாவின் அடையாளங்களில் ஒருவராகப் பார்க்கப்படுபவர் மறைந்த நடிகர் ராஜ்குமார். அவரின் இரு மகன்களான புனீத் ராஜ்குமார் மற்றும் சிவ ராஜ்குமார் ஆகிய இருவரும் சுப்பர் ஸ்டார் நடிகர்களாக இருந்தனர். சமீபத்தில் புனீத் மறைந்தது கன்னட சினிமா நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ராஜ்குமாரின் பேரனான யுவராஜ்குமாரை தற்போது கேஜிஎப் தயாரிப்பு நிறுவனம் தங்கள் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறது. இந்த படத்தின் அறிவிப்பில் “ கன்னட சினிமாவின் பெருமைமிகு அடையாளமான ராஜ்குமார் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை நடிகரான யுவராஜ்குமாரை எங்கள் நிறுவனத்தின் படத்தின் மூலம் அறிமுகப்படுத்துகிறோம். இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் அனந்த்ரம் இயக்க உள்ளார்” என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இப்போது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

KGF நிறுவனத்தின் அடுத்த பட ஹீரோ இவர்தான்…. சர்ப்ரைஸ் UPDATE– கொண்டாடும் ரசிகர்கள்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Hombale films next movie hero is Rajkumar grandson

People looking for online information on ஹோம்பலே பிலிம்ஸ், Hombale Films, Hombale films next movie updates, KGF2, Rajkumar grandson will find this news story useful.