பிரபாஸ் அடுத்து கேஜிஎஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்து வருகிறார்.
Also Read | ‘பெரியப்பா’ Experience … KGF 2 பாத்துட்டு இயக்குனர் ஷங்கர் போட்ட வைரல் Tweet!
கவனம் ஈர்த்த பேன் இந்தியா திரைப்படங்கள்…
சமீபகாலமாக இந்தியா முழுவதும் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆகும் பேன் இந்தியா திரைப்படங்கள் தென்னிந்தியாவில் இருந்து உருவாகி வருகின்றன. அப்படி உருவான பாகுபலி1, பாகுபலி 2, கேஜிஎஃப்1. கேஜிஎஃப் 2 மற்றும் புஷ்பா ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாக அமைந்தன. அதையடுத்து இப்போது இந்தியா முழுவதும் ரிலீஸாகும் படங்கள் உருவாக ஆரம்பித்துவிட்டன.
இணைந்த பேன் இந்தியா நாயகர்கள்…
'கே.ஜி.எஃப்' படத்தின் முதல் இரண்டு பாகங்களை இயக்கிய இயக்குனர் பிரசாந்த் நீல் தற்போது இந்தியா முழுவதும் கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ளார். அடுத்து இவர் 'கே.ஜி.எஃப்' பட நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபாஸ் கதாநாயகான நடிக்கும் ’சலார் ’ படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரபாஸுடன், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு மற்றும் பிருத்விராஜ் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேஜிஎஃப் படத்தின் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு 30 சதவீதம் நிறைவு செய்திருப்பதாகவும், மீதமுள்ள விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. பாகுபலி வெற்றிக்குப் பின்னர் பிரபாஸ் நடிக்கும் படங்கள் இந்தியா முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகின்றன. பாகுபலிக்குப் பின் அவர் நடித்த சாஹோ மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய திரைப்படங்கள் இந்தியா முழுவதும் அதிக அளவிலான திரைகளில் ரிலீஸாகின.
ஹோம்பலே வெளியிட்ட அறிவிப்பு…
இந்நிலையில் சில மாதங்களாக சலார் பற்றி அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் பிரபாஸ் ரசிகர்கள் ஆர்வமாக அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது சலார் படத்தின் அப்டேட்டுகளுக்காக ‘சலார்’ படத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை உருவாக்கியுள்ளது. இதன் பின்னர் சலார் படத்தின் அப்டேட்டுகள் அந்த பக்கம் மூலமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8