கொரோனா.. புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் மரணம்..... இன்னும் சில தினங்களில் பிறந்தநாள்.....

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸினால் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. இருப்பினும் ஆங்காங்கே சில இடங்களில் ஒரு சிலர் கொரோனா வைரஸில் இருந்து முற்றிலும் குணமாகி வீடு திரும்பி நம்பிக்கை அளித்து வருகின்றனர்.

உலக அளவில் திரையுலக பிரபலங்கள் , அரசியல் தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அவர்களில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் மற்றும் அவரது ரீட்டா வில்சன், நடிகர் இட்ரிஸ் எல்பா(Idris Elba), பிரெஞ்சு நடிகை Olga Kurylenko, இங்கிலாந்து இளவரசர் பிரின்ஸ் சார்லஸ் என அந்த பட்டியல் மிக நீளம்.

இது அவர்களது ரசிகர்களிடமும் ஆதரவாளர்களிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டாலும் பிரபலங்கள் பலரும் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய பதிவுகளை சமூக வலைதளங்கள் வாயிலாக எழுதி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஹாலிவுட் நடிகர் ஜேய் பெனடிக்ட் (jay Benedict) இன்று மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 68. இந்னும் சில வாரங்களில் அவரது 69 வது பிறந்தநாளை கொண்டாடவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜேய் பெனடிக்ட் ஏலியன்ஸ், தி டார்க் நைட் ரைஸஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து நடித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Hollywood actor Jay Benedict died due to Coronavirus | ஹாலிவுட் நடிகர் ஜேய் பெனடிக்ட் கொரோனா காரணமாக மரணம்

People looking for online information on Coronavirus, Covid-19, Jay Benedict will find this news story useful.