வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் ‘வாடிவாசல்’ படத்தின் வேற லெவல் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.

நாவலை அடிப்படையாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். முன்னதாக இந்த படத்துக்கான இசை பணிகள் தொடங்கி விட்டதாக ஜி.வி.பிரகாஷ் சமூகவலைதளத்தில் தெரிவித்திருந்த நிலையில், ‘வாடிவாசல்’ படத்தின் டைட்டில் லுக் 2021 ஜூலை 16, மாலை வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் வெற்றிமாறனும் சூர்யாவும் முதல் முறை இணையும் இந்த படத்தின் ‘டைட்டில் லுக்’ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பழந்தமிழர் காளையை அடக்குவது போல் அல்லது ஒரு சிந்து சமவெளி நாகரிக தொல்பொருள் சின்னம் போல் இருக்கும் இந்த டிட்டைல் லுக் வைரலாகி வருகிறது.
இதனை ட்விட்டரில் பகிர்ந்துள்ள, இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, “நம் வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக்கை உங்கள் பார்வைக்கு வெளியிடுவதில் பேரின்பமும் பெருமையும் கொள்கிறேன்” என கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.