BREAKING: HIP HOP தமிழா ஆதி நடிக்கும் புதிய SUPER HERO திரைப்படம்.. இந்த தகவல் செம மாஸா இருக்கே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிக்கும் புதிய சூப்பர் ஹீரோ படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | அதிர்ச்சி!!.. ஹோட்டல் அறையில் இளம் தமிழ் நடிகை, மாடல் எடுத்த சோக முடிவு!!

Sathya Jyothi Films மற்றும் நடிகர் 'ஹிப் ஹாப் தமிழா' ஆதி கூட்டணியில் வெளியான ‘ சிவகுமாரின் சபதம்' மற்றும் 'அன்பறிவு’ திரைப்படங்கள், நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்,  இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

மரகத நாணயம் படத்தின் இயக்குனர் ARK சரவணன் இயக்கும் “வீரன்”  படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சி பகுதியில் நடந்தது. நேற்றுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது என்றும் இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு மட்டும் சென்னையில் நடைபெறும் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர் ஆக உருவாகி வருகிறது‌. இந்த படத்தில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  நடிக்கிறார்கள்.

வீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் தீபக் D மேனன் (ஒளிப்பதிவு), G.K.பிரசன்னா (எடிட்டர்), NK ராகுல் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்ஸ்), ட்யூனி ஜான் (பப்ளிசிட்டி டிசைனர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), அமீர் (ஸ்டில்ஸ்), மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பாளர்) ஆகியோர் பணிபுரிகின்றனர்.

வீரன் படத்தை Sathya Jyothi Films T.G.தியாகராஜன்  வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

Also Read | அடுத்த ட்ரீட்..பிரபல தெலுங்கு இயக்குனருடன் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் சூப்பர் அப்டேட்

தொடர்புடைய இணைப்புகள்

Hiphop Thamizha Aadhi Superhero Film Veeran shoot wrapped up

People looking for online information on Aadhi, HipHop Thamizha, Veeran Movie will find this news story useful.