VIDEO: பெட்ரோல் விலை... மைலேஜ், அரசியல், நடிப்பு, இசை பற்றி மனம் திறந்த HIPHOP TAMIZHA ஆதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தற்போது சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி "சிவக்குமாரின் சபதம்" படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார்.

hiphop tamizha adhi interview for sivakumarin sabadham

சமீபத்தில் இந்த படத்தின் மூன்று பாடல்களும் வெளியிடப்பட்டன. மேலும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் 19.09.2021 அன்று வெளியானது. இந்த டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தது.  இந்த 'சிவகுமாரின் சபதம்' திரைப்படம் சென்சார் போர்டு மூலம் கிளீன் 'U' சான்றிதழை பெற்றுள்ளது. இந்த படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது என தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

hiphop tamizha adhi interview for sivakumarin sabadham

இந்நிலையில் நமது Behindwoods சேனலுக்கு ஹிப்பாப் தமிழா ஆதி பிரத்யேகமாக பேட்டி கொடுத்துள்ளார். அதில் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு சுவரஸ்யமாக பதில் அளித்துள்ளார். தனது அடுத்த 5 வருட பிளான் பற்றி, நடிப்பு, சுயாதீன இசை, திரைப்பட இசை, பாரதியார், காதல், அரசியல், திரைப்பட இயக்கம், தனக்கு உதவிய நண்பர்கள் என பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் குறிப்பாக பெட்ரோல் விலை பற்றியும் பேசியுள்ளார். முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 தற்போது ஆதி, சத்ய ஜோதி தயாரிப்பில் அட்லியின் உதவியாளர் அஸ்வின் ராம் இயக்கும் அன்பறிவு படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் முதல் லுக் டீசர் வெளியாகியது. இதில் ஆதியுடன் விதார்த், நெப்போலியன் மற்றும் ஊர்வசி ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் முதல்முறையாக ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக நம்பந்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

VIDEO: பெட்ரோல் விலை... மைலேஜ், அரசியல், நடிப்பு, இசை பற்றி மனம் திறந்த HIPHOP TAMIZHA ஆதி! வீடியோ

மற்ற செய்திகள்

Hiphop tamizha adhi interview for sivakumarin sabadham

People looking for online information on Hiphop Tamizha will find this news story useful.