HIPHOP தமிழா நடிப்பில் மரகத நாணயம் இயக்குனர் இயக்கும் புதிய படம்.. மாஸான பெயருடன் வெளியான TITLE LOOK!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Sathya Jyothi Films, T.G. தியாகராஜன் வழங்கும், ARK சரவணன் இயக்கத்தில், ஹிப் ஹாப் தமிழா நடிக்கும் “வீரன்” திரைப்படம் எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது !

Advertising
>
Advertising

Also Read | பாண்டிச்சேரி கடற்கரையில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன்.. #SK20 படத்தின் வேறலெவல் அப்டேட்!

புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனமான Sathya Jyothi Films மற்றும் நடிகர் ஹிப் ஹாப் தமிழா கூட்டணி எப்போதும் வெற்றிகரமான திரைப்படங்களையே தந்துள்ளது. இவர்கள் கூட்டணியில் வெளியான ‘இது சிவகுமாரின் சபதம் மற்றும் அன்பறிவு’ திரைப்படங்கள், மிகப்பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இப்போது இந்த கூட்டணி மீண்டும் ‘வீரன்’ திரைப்படத்திற்காக  மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.

ARK சரவணன் இயக்கும் “வீரன்”  படத்தின் படப்பிடிப்பு இன்று (மே 25, 2022) காலை பொள்ளாச்சியில் எளிமையான சடங்குகளுடன் இனிதே தொடங்கியது. படக்குழுவினர் ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்புவார்கள். இந்த திரைப்படம் ஒரு ஃபேன்டஸி காமெடி ஆக்‌ஷன் என்டர்டெய்னர், இதில் ஆதிரா ராஜ் நாயகியாக நடித்துள்ளார். மேலும் முனிஷ்காந்த், காளி வெங்கட், சசி செல்வராஜ் ஆகியோர் இணைந்து  நடிக்கிறார்கள்.

வீரன் படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பது மட்டுமின்றி ஹிப் ஹாப் தமிழா இப்படத்திற்கு இசையமைக்கிறார். தொழில்நுட்பக் குழுவில் தீபக் D மேனன் (ஒளிப்பதிவு), G.K.பிரசன்னா (எடிட்டர்), NK ராகுல் (கலை), மகேஷ் மேத்யூ (ஸ்டண்ட்ஸ்), ட்யூனி ஜான் (பப்ளிசிட்டி டிசைனர்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), அமீர் (ஸ்டில்ஸ்), மற்றும் கீர்த்தி வாசன் (ஆடை வடிவமைப்பாளர்).

வீரன் படத்தை Sathya Jyothi Films T.G.தியாகராஜன்  வழங்க, செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன்  தயாரித்துள்ளனர். இப்படத்தை ஜி.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

Also Read | துல்கர் சல்மான் - ராஷ்மிகா - மிருணாள் நடிக்கும் புதிய ரொமாண்டிக் படம்.. ரிலீஸ் எப்போ? OFFICIAL UPDATE

தொடர்புடைய இணைப்புகள்

Hip Hop Tamizha starrer ‘Veeran’ shooting starts with ritual ceremony

People looking for online information on Hip Hop Tamizha, Hip Hop Tamizha Adhi, Veeran Movie, Veeran Movie Updates will find this news story useful.