‘ஆம்பள’, ‘இன்று நேற்று நாளை’, ‘தனி ஒருவன்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ஆதி.

தொடர்ந்து 2017-ஆம் ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் ‘மீசைய முறுக்கு’ படத்தை இயக்கி, இசையமைத்து ஹீரோவாக நடித்திருந்தார். பின்னர் ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் தான், ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கப் பட்டதாகவும், அவரது சேனலில் ஏராளமான பாடல்கள் அழிக்கப் பட்டதாகவும், கூறப்பட்டது. அத்துடன், சேனலின் பெயரும் மாற்றப்பட்டதாக தெரியவந்ததும் ரசிகர்கள் அதிர்ந்து போயினர்.
20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடரும் இந்த சேனல் முடங்கியதாகக் கூறப்பட்டதை அடுத்து ரசிகர்கள் தவித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஹிப் ஹாப் தமிழா ஆதி, “I'm back.. உங்கள் அன்புக்கு நன்றி Youtube India” என்று தமது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.
தற்போது ஆதி, சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், 'சிவகுமாரின் சபதம்' என்கிற படத்தை இயக்கி, நாயகனாக நடித்துள்ளார்.
ALSO READ: "என் friend Yashika!".. மனம் திறந்த பிரபல பிக்பாஸ் நடிகை!.. நெகிழ வைக்கும் பதிவு!