"அதோ பாரு பச்ச கிளி"..வெளியானது ஹிப்ஹாப் ஆதியின் 'சிவகுமார் பொண்டாட்டி' பாடல்! செம்ம வைரல்பா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிப்ஹாப் தமிழா இயக்கி நடிக்கும் "சிவகுமாரின் சபதம்" படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வைரலாகி வருகிறது.

hip hop Tamiza new movie most viral first single released

'மீசைய முறுக்கு',  'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்களுக்கு பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'சிவகுமாரின் சபதம்'.

hip hop Tamiza new movie most viral first single released

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி வைரலானது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் "சிவகுமார் பொண்டாட்டி" ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. அதன் படி இன்று காலை வெளியாகிய பாடல் இணையத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபல கானா பாடகர் கானா மைக்கெல் பாடி இருக்கும் இப்பாடலை எழுதி இசை அமைத்திருக்கிறார் ஹிப்ஹாப் தமிழா. இப்படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை 'திங்க் மியூசிக்', நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிப்பதிவாளராக அர்ஜுன்ராஜா, எடிட்டராக தீபக், கலை இயக்குநராக வாசுதேவன் ஆகியோர் பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்

Hip hop Tamiza new movie most viral first single released

People looking for online information on Hip, Hiphop Tamizha will find this news story useful.