ரஜினியை கௌரவித்த நிகழ்வு!.. விருதை பெற்றவர் ஐஸ்வர்யாவா? சௌந்தர்யாவா? குழம்பிய நெட்டிசன்கள்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழகம் மற்றும் புதுவை அளவில் அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Advertising
>
Advertising

Also Read | அருள்நிதி நடிப்பில் வெளிவந்த புதிய த்ரில்லர் திரைப்படம்.. பிரபல OTT-யில் ரிலீஸா? எப்போ?

அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது விழாவில் தமிழகம் மற்றும் புதுவை அளவில் இதுவரை அதிக வருமான வரி செலுத்தியவர்களுக்கான அங்கீகாரம் தரும் வகையில் அவர்களுக்கு முறையான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் புதுவை கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்துகொண்டு உரியவர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்து பேசினார்.

இந்த நிகழ்வு சென்னை ஆழ்வார்பேட்டை மியூசிக் அகாடமியில் வருமான வரி தின நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக தமிழிசை சௌந்தரராஜன் அவர்களுடன் இணைந்து உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு & புதுச்சேரி மண்டலத்தில் அதிக வருமான வரி செலுத்தியதற்காக திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்ட விருதினை அவருக்கு பதிலாக அவருடைய மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

இந்த புகைப்படத்தை தம்முடைய சோசியல் மீடியாவில் பதிவிட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த், “அதிக வருமான வரி செலுத்துபவரின் மகள் என்பதில் பெருமை கொள்கிறேன். வருமான வரி தினத்தில் அப்பாவை கௌரவப்படுத்திய தமிழகம் மற்றும் புதுவை வருமான வரி துறைக்கு நன்றி.” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதனிடையே விருதைப் பெற்றுக் கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தா? சௌந்தர்யா ரஜினிகாந்த்தா? என்று உருவ ஒற்றுமை காரணமாக பலரும் குழம்பி போய், “சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் விருதை பெற்றுக் கொண்டார்” என்றும் குறிப்பிட்டு வந்தனர்.

ஆனால் உண்மையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான், தன்னுடைய பக்கத்தில் இந்த புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் விருது பெற்ற அதே புடவையில் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரையும் சந்தித்த மற்றொரு புகைபடத்தையும் தம்முடைய பக்கத்தில் ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் அவர்தான் அந்த விருதை பெற்றார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.

Also Read | பிரபல ஹீரோவின் படத்தில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை.. சும்மா பரவும் ஃபோட்டோஸ்.!

தொடர்புடைய இணைப்புகள்

High and prompt income tax payer rajini aishwarya tweet

People looking for online information on Aishwarya Rajinikanth, Incometaxday2022, Rajini, Rajinikanth, Soundarya rajinikanth will find this news story useful.