போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், வலிமை படம் உருவாகி உள்ளது.
2020 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்ட வலிமை திரைப்படம், கொரோனா காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனதால் படத்தின் வெளியீடும் தள்ளிப் போனது. இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதும் நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் முழுவீச்சாக நடந்து வருகிறது. இந்த படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதனையொட்டி நேற்று மாலை வலிமை படத்தின் முன்னோட்டம் (Glimpse of Valimai) வெளியானது.
வலிமை படத்தின் முன்னோட்டம் வெளியானது முதல் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாது பொதுவான ரசிகர்களும் வியந்து பாராட்டும்படி அமைந்துள்ளது. அதிலும் முன்னோட்டத்தில் உள்ள சில விடயங்கள் தமிழ் சினிமா இதுவரை தொடாத கதைக்களமாக இருப்பதாக தெரிகிறது. முன்னோட்டத்தின் கவனிக்க வேண்டிய குறிப்புகள் நிறைய உள்ளன.
நாங்க வேற மாரி பாடல் வெளியாகும் போதே மதுரை மாவட்டம் பற்றிய குறிப்புகள் பாடல் காட்சியில் இடம் பெற்றிருந்தது. இப்பொழுது வெளியான முன்னோட்டத்திலும் தல அஜித் பயன்படுத்தும் இந்த பைக் மதுரை மாவட்டத்தை சார்ந்த TN59 ஆக உள்ளது.
இந்த காட்சி முன்னோட்டத்தில் அஜித் முகத்தை காட்டும் முதல் காட்சியாகும் இந்த காட்சியில் அஜித் காலில் காயம்பட்டு இருப்பதாக காட்டப்பட்டு இருக்கும்.
மேலும் இந்த காட்சியில் அஜித் பைக்கில் ஹெல்மெட் அணிந்து செல்லும் போது அவரது முகத்தை கூர்ந்து கவனித்தால் முகத்தில் காயங்கள் இருக்கும். வில்லனுடன் ஏற்பட்ட மோதலால் காயமடைந்து இருக்க கூடும் என அவதானிக்கலாம்.
மேலும் தல அஜித் வில்லனிடம் பேசும் போது அவர் Sun Glass Bluetooth பயன்படுத்தியிருப்பார்.
வில்லன் கார்த்திக்கேயா தோன்றும் இந்தக்காட்சியில் அவருக்கு ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா வைத்துள்ள கோணத்தை கவனித்தால், வில்லனின் இடது பக்கம் ஒரு மண்டை ஓடு வரைபடம் இருக்கும் அதில் சாத்தானின் அடிமைகள் (SATAN'S SLAVES) என்று எழுதியிருக்கும் அதன் அருகிலேயே MC என்று இருக்கும் MC என்பது Motorcycle Club என்பதின் சுருக்கம்.
Satan's Slaves Motorcycle Club என்பது 1970 களில் ஒருங்கிணைந்த பிரிட்டன் முழுவதும் பரபரப்பை கிளப்பிய கும்பல் ஆகும். இவர்கள் செய்த வன்முறைக்காக ஸ்காட்லாந்து முழுவதும் இப்பொழுதும் அறியப்படும் கும்பல் இந்த Satan's Slaves Motorcycle Club.
"நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள். சாத்தானின் அடிமைகள் நாங்கள்.
இருள் வலை தான் எங்கள் உலகு. அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்" என்ற முன்னோட்டத்தில் வரும் வசனமும் இதனை உறுதிபடுத்துகிறது. இருள் வலை (Dark Web) என்பது இண்டர்நெட் மோசடிக்கான குறிப்பாக வெளிப்படுகிறது.
இறுதியாக வலிமை (Valimai) முன்னோட்டத்தின் முடிவில் People's COP Action from Pongal 2022 என்று முடிகிறது. இதுவரை வினோத் எடுத்த படங்களின் Genre வகைமை என்பது சதுரங்க வேட்டை - Heist Thriller, தீரன் அதிகாரம் ஒன்று - Action Thriller, நேர்கொண்ட பார்வை - Court Room Drama, ஆனால் வலிமை - Action Drama அல்லது Action Thriller ஆ என்பது படம் வரும் பொழுது தெரிந்துவிடும்.
ஏற்கனவே வலிமை படத்தின் மீதான எதிர்பார்ப்பு விண்ணளவுக்கு உள்ளது. அதை இந்த முன்னோட்டம் மேலும் எகிர வைத்துள்ளது.