பொதுவாக, சமூக வலைத்தளம் என்றாலே, உலகத்தில் எங்கேனும் ஒரு மூலையில் நடந்த நிகழ்வு அல்லது அது தொடர்பான வீடியோ என ஏதாவது ஒன்று, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகும்.
Also Read | அதிர்ச்சி! மர்மமான முறையில் இறந்து கிடந்த பிரபல நடிகை.. போலீஸார் தீவிர விசாரணை
சாலையில், மக்கள் யாராவது வேடிக்கையாக செய்யும் விஷயங்கள், எதேச்சையாக விபத்து போல நேரும் சம்பவங்கள் என இப்படி பல நிகழ்வுகள், அதிகம் பகிரப்பட்டபட்டு கொண்டே இருக்கும்.
அதிலும் குறிப்பாக, ஏதாவது ஒரு தொலைக்காட்சித் தொடர் அல்லது படத்தில் வரும் காட்சிகளில் உள்ள லாஜிக் தொடர்பாக கூட, நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி அதன் வீடியோவை டிரெண்ட் செய்வார்கள்.
டிரெண்ட் ஆகும் வீடியோ..
இப்படி சமீப காலமாக நிறைய வீடியோக்கள் டிரெண்ட் ஆவதை நம் பார்த்திருப்போம். அந்த வகையில், ஹிந்தியில் சீரிஸ் ஒன்றின் காட்சி, தற்போது நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், நடிகை கதாபாத்திரத்தில் வரும் பெண் ஒருவர், தன்னுடைய துப்பட்டாவை கழுத்திற்கு பின்னால் சுற்றி போடுகிறார். அப்போது, அங்கே இருக்கும் மின் விசிறி ஒன்றில் மேலே சென்று துப்பட்டா விழுகிறது.
சிக்கிக் கொண்ட நாயகி
அடுத்த சில நொடிகளில், விசிறிக்கு இடையே நடிகையின் துப்பட்டா சிக்கிக் கொள்ள, அவரின் கழுத்தும் இறுகிக் கொள்கிறது. நாயகியை சுற்றி, நாயகனுடன் ஏராளமான பேர் இருக்க, அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். தொடர்ந்து, நாயகியை பிடித்தபடி நிற்கும் நாயகன், மின் விசிறியை அணைக்குமாறு கூச்சல் போடுகிறார்.
நாயகனின் 'ஹீரோயிசம்'
தொடர்ந்து, ஒரு பெண்ணும் Plug-ஐ எடுக்க பார்த்து அதுவும் முடியாமல் போகிறது. இதனால் சுற்றி இருந்த அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் கத்திய படி நிற்க, யாரும் எந்தவித முயற்சிகளும் மேற்கொள்ளவில்லை. நாயகியின் நிலை மோசமாகி கொண்டே போக, கண்ணீர் விடும் நாயகன், கடைசியில் துப்பட்டாவை கடித்த படி, அறுத்து எடுத்து நாயகியை காப்பாற்றுகிறார். இது தொடர்பான காட்சிகளை இணையத்தில் பலரும் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
அதே போல, இந்த காட்சி தொடர்பாக தங்களின் கருத்துக்களையும், நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்டுகளில் குறிப்பிட்டு வருகின்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8