VIDEO: தளபதி விஜய்யைப் பற்றி பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே என்ன சொன்னார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். 

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடைபெற்று வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பில் சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனியை, விஜய் சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது

இந்த படப்பிடிப்பில் நடிகை பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டார். இந்த படப்பிடிப்பு முடிந்து தனது சொந்த ஊரான மும்பை விமான நிலையத்தில் பத்திரிக்கை மற்றும் புகைப்பட நிருபர்கள், பூஜாவிடம் தளபதி விஜய்யுடன் பணியாற்றிய அனுபவம் எப்படி இருந்தது? என கேட்ட கேள்விக்கு,

விஜய்யுடன் பணியாற்றியது சூப்பர் ஹாப்பி! என பதில் அளித்துள்ளார்.

 

VIDEO: தளபதி விஜய்யைப் பற்றி பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே என்ன சொன்னார் தெரியுமா? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

HERE’S WHAT BEAST HEROINE POOJA HEGDE SAID ABOUT THALAPATHY

People looking for online information on Beast, Pooja Hegde, Vijay will find this news story useful.