விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் தெறியான 1ST லுக் வெளியீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா, இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.

Advertising
>
Advertising

அதனை முன்னிட்டு Rowdy Pictures சார்பில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில், மாயா இயக்குநர் அஸ்வின் சரவணன் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது, நயன்தாரா நடிக்கும் இந்த புதிய படத்துக்கு கனெக்ட் என பெயரிடப்பட்டது. படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன, 2015ஆம் ஆண்டு வெளியான  ‘மாயா’ படத்தை நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அனுபம் கேர், சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்

தற்போது நயன்தாரா, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தின் வெளியீட்டுக்கு காத்திருக்கிறார்.  தனி நாயகியாக நடித்த ‘நெற்றிக்கண்’ படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது. இந்த தீபாவளிக்கு ரஜினியுடன் நடித்த அண்ணாத்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. 

ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மெலோ டிராமாவாக உருவாகியுள்ள ‘கூழாங்கல்’ படம், இன்னொரு புறம் க்ரைம் திரில்லராக உருவாகியுள்ள ‘ராக்கி’ என இரு வித்தியாசமான படைப்புகளை வெளியிடுகிறது. இந்த படங்களை அடுத்து புதிய தயாரிப்பாக காமெடி டிராமாவாக “ஊர்குருவி”,  “Walking/Talking Strawberry Ice Cream “ படத்தினை  தயாரிக்கிறார்கள்.

தொடர்புடைய இணைப்புகள்

Here you Lady superstar next with Ashwin saravana Connect

People looking for online information on Nayanthara, Vignesh shivan will find this news story useful.