சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக்... செம அறிவிப்புடன் மாஸ்-ஆக வெளியான போட்டோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து முக்கியமான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிம்பு. சிறுவயதில் இருந்தே நடித்து வரும் இவர், பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாநாடு ஷூட்டிங், விரைவில் தொடங்கவுள்ளது. இதனிடையே தற்போது சிம்பு அவரது சொந்த தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சிம்பு நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர், வரும் 26-ஆம் தேதி (திங்கட்கிழமை), பிற்பகல் 12.12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புடன், கையில் பேட்டை ஏந்தி மாஸாக நடந்து வரும் சிம்புவின் புகைப்படமும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. 

 

Tags : Simbu, Str, STR46

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு | Here is the official announcement on simbu suseenthiran film first look

People looking for online information on Simbu, Str, STR46 will find this news story useful.