பிக்பாஸ்-ல் தனிமைப்படுத்தப்படும் 2 போட்டியாளர்கள்.. அதிருப்தியில் ஷிவானி.. இன்னொருவர் யார்..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் டிவியின் பிக்பாஸ் சீசன் 4 போட்டி தற்போது தொடங்கியுள்ளது. இதில் ரியோ ராஜ், பாலாஜி முருகதாஸ், ஆஜித், ஜித்தன் ரமேஷ், ஆரி, அனு மோகன், அனிதா சம்பத், அறந்தாங்கி நிஷா, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷிவானி, கேப்ரியல்லா, சனம் ஷெட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், சோம், சம்யுக்தா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் வீட்டிற்குள் சுவாரஸ்யமும், ஈடுபாடும் குறைவாக உள்ள நபர்களை போட்டியாளர்களை நாமினேட் செய்ய வேண்டி வர, ஷிவானியும் ஜித்தன் ரமேஷுன் நாமினேட் செய்யப்படுகிறார்கள். இதை தொடர்ந்து அவர்கள் ஒரு கண்ணாடி அறையில் அடைத்து வைக்கப்படுகிறார். இது நடிகை ஷிவானிக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது போலவுள்ளது. 

 

பிக்பாஸ்-ல் தனிமைப்படுத்தப்படும் 2 போட்டியாளர்கள்.. அதிருப்தியில் ஷிவானி.. இன்னொருவர் யார்..? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

பிக்பாஸ் புதிய புரொமோ | here is the latest promo of biggboss 4 tamil ft shivani and ramesh

People looking for online information on BiggBoss 4 Tamil, Jithan Ramesh, Shivani Narayanan will find this news story useful.