தனுஷின் 37-வது பிறந்தநாள் பார்ட்டி.. மனைவி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம்.! - வேற லெவல் லுக் இதோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் தனது குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை அவரது மனைவி வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று தனுஷ் தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, நடிகர் தனுஷின் மனைவியும் இயக்குநருமான ஐஷ்வர்யா தனுஷ் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குடும்பத்துடன் சிம்பிளாக பிறந்தநாளை கொண்டாடிய தனுஷின் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். பின்பக்கமாக திரும்பி நின்றபடி, ஃபன்க் ஹேர்கட்டுடன் ஸ்டைலாக இருக்கும் தனுஷின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரல் ஆகி வருகின்றது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ் போட்டோ | Here is the Latest Photo of Dhanush on his 37-th Birthday Celebration with family

People looking for online information on Aishwarya R Dhanush, Dhanush, Dhanush Birthday\, Dhanush Latest Photo, Jagame Thanthiram will find this news story useful.