பலாப்பழ பிரியாணி முதல் செட்டிநாட்டு குழம்பு வரை.. விக்கி - நயன்தாரா திருமண ஸ்பெஷல் உணவுகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தில் விருந்தினர்களுக்கு பரிமாறப்பட்ட கல்யாண விருந்து உணவு பதார்த்தங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Here is the food menu of Nayanthara and Vignesh Shivan's wedding
Advertising
>
Advertising

விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா ஆகியோர், கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அவர்கள் இருவரும் பல இடங்களில் ஒன்றாக சுற்றித் திரியும் புகைப்படங்களை விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

சமீபத்தில் கூட, இருவருமாக இணைந்து திருப்பதி உள்ளிட்ட கோவில்களில் தரிசனம் செய்த புகைப்படம் மற்றும் வீடியோக்களும், பெரிய அளவில் வைரலாகி இருந்தது.

Here is the food menu of Nayanthara and Vignesh Shivan's wedding

இந்நிலையில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோரின் திருமணம் மகாபலிபுரத்தில் இன்று (09.06.2022) நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் இந்த நிக்ழ்வில் கலந்துகொண்டனர்.

இயக்குனர் மணிரத்னம், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி, கௌதம் மேனன், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், அனிருத், அட்லி, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, விஜய் சேதுபதி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள செரேட்டன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. காலை 8:30 முதல் திருமண வைபவங்கள் நடை பெற்றன.

இந்த திருமண நிகழ்வில் விருந்தினருக்கு விருந்தாக பிரபலமான உணவு பதார்த்தங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பன்னீர் பட்டாணி குழம்பு,பூரி,  பருப்பு குழம்பு, அவியல், மோர் குழம்பு, மிக்கன் (சைவ கோழிக்கறி) செட்டி நாடு குழம்பு, உருளைக்கிழங்கு காரம், வாழைக்காய் வறுவல், சேனைக்கிழங்கு வறுவல், சேப்பை கிழங்கு புளிக் குழம்பு, காளான் மிளகு வறுவல், கேரட் பீன்ஸ் பொரியல், பொரித்த காய்கறிகள், பொன்னி அரிசி சாதம், பலாப்பழ காத்தல் பிரியாணி, சாம்பார் சாதம், தயிர் சாதம், பூண்டு மிளகு ரசம், தயிர், காய்கறி ரைதா, வடகம், வத்தல், அப்பளம், இளநீர் பாயசம், பாதாம் அல்வா, ஐஸ் கிரீம் ஆகிய உணவுகள் பரிமாறப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Here is the food menu of Nayanthara and Vignesh Shivan's wedding

People looking for online information on Ajith Kumar, AK62, Atlee, Food, Nayanthara, Shalini, Sharukh Khan, Suriya, Vignesh shivan, WikkiNayan will find this news story useful.