சூர்யா - வெற்றிமாறன் கூட்டணியின் 'வாடிவாசல்' .. சர்ப்ரைஸாக வெளியான FIRST LOOK.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து சூர்யா, வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். 

இந்நிலையில் இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வாடிவாசல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் சர்ப்ரைஸாக வெளியிட்டுள்ளனர். கிராமத்து இளைஞன் லுக்கில் இருக்கும் சூர்யாவின் இந்த போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ட்ரெண்ட் அடித்து வருகிறது. இத்திரைப்படம் சி.சு.செல்லப்பா எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகவுள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இத்திரைப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

சூர்யா நடிக்கும் வாடிவாசல் ஃபர்ஸ்ட் லுக் | here is the first look of suriya starring vetrimaaran's vaadivasal

People looking for online information on First Look, Kalaippuli S Thanu, Suriya, Vaadivaasal, Vetrimaaran will find this news story useful.