BREAKING - தனுஷ் - செல்வராகவன் இணையும் திரைப்படம்.. அட.. இதுதான் NEXT PLAN-ஆ..?!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் - செல்வராகவன் இணையும் திரைப்படம் குறித்து செம மாஸ் தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதனிடையே தனுஷ் மற்றும் செல்வராகவன் இணையும் திரைப்படம் குறித்து சூப்பர் தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்திற்கான Pre Production வேலைகள் தற்போது ஆரம்பித்துவிட்டதாகவும், விரைவில் ஊட்டி , குலுமனாலி உள்ளிட்ட இடங்களில் லோகேஷன் பார்க்கும் வேலைகள் தொடங்கவுள்ளதாகவும் நமது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இத்திரைப்படம் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் பட தகவல் | Here is the exclusive update on dhanush selvaraghavan project

People looking for online information on Dhanush, Kalaippuli S Thanu, Selvaraghavan will find this news story useful.