VIRAL : அட.. எம்.குமரன் படத்துல தனுஷ்-ஆ..?!! - இந்த போட்டோஸ்-ஐ பார்த்து., கண்டிப்பா ஆச்சர்யப்படுவீங்க.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

எம்.குமரன் திரைப்படத்தின் 16-வருடத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் வேளையில், அதில் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் வைரல் அடித்து வருகிறது. 

ஜெயம் ரவி நடிப்பில் 2004-ஆம் ஆண்டில் வெளியான திரைப்படம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. மோகன் ராஜா இயக்கிய இத்திரைப்படத்தில் நதியா, அசின், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்தனர். பாக்சிங்கையும் பாசத்தையும் கலந்து கட்டி உருவான இத்திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. இதனிடையே இன்றோடு இத்திரைப்படம் வெளியாகி 16 வருடங்கள் நிறைவடைவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

இந்நிலையில் தற்போது எம்.குமரன் திரைப்படத்தின் வின்டேஜ் புகைப்படங்கள் ட்ரெண்ட் அடித்து வருகிறது. இத்திரைப்படத்தின் பூஜையின் போது நடிகர் தனுஷ் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திரைப்பட பூஜை நிகழ்வில் நடிகர்கள் சிபிராஜ், ஶ்ரீகாந்த் உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது இளம் நாயகர்களாக கலக்கிய இவர்களின் புகைப்படங்கள் இப்போது வைரல் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எம்.குமரன் பட பூஜை ஸ்டில்ஸ் | Here is some unseen clicks od dhanush in m kumaran movie

People looking for online information on Dhanush, Jayam Ravi, M Kumaran Son of Mahalakshmi will find this news story useful.