பிக்பாஸ் பிரபலத்தின் ADULT - COMEDY படம்.. அட., இந்த சூப்பர் ஹிட் இளம் நடிகைதான் ஹீரோயினா.?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இளம் நடிகர் நடிக்கும் படம் குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் மஹத். இவர் அஜித்தின் மங்காத்தா, விஜய்யின் ஜில்லா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பரான இவர் தற்போது உத்தமன் எனும் படத்தில் நடித்துள்ளார்.

இவர் தற்போது நிதின் சத்யா தயாரிப்பில், அறிமுக இயக்குநர் அரவிந்த் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். அடல்ட் - காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட இத்திரைப்படத்தில், தற்போது சில்லுகருப்பட்டி திரைப்படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த நிவேதிதா சதீஷ் ஒப்பந்தமாகியுள்ளாராம். விரைவில் இத்திரைப்படத்தின் படபிடிப்பும் தொடங்கவுள்ளதாம். 

 

மஹத்தின் அடுத்த திரைப்பட தகவல் | Here is an exclusive update on biggboss actor film

People looking for online information on Mahat Raghavendra, Nivedhithaa Sathish, Sillu Karupatti Tamil will find this news story useful.