சென்னை : பாரதி கண்ணம்மா தொடரில், ஹேமா கேட்கும் கேள்வியால், பாரதி வீட்டில் இருக்கும் அனைவரும் பதட்டத்தில் உள்ளனர்.
விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. தற்போது வெளிவந்திருக்கும் பாரதிகண்ணம்மா தொடரின் ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
மனைவியை விவாகரத்து செய்த இசையமைப்பாளர் D. இமான்.. அவரே வெளியிட்ட அறிக்கை
உத்தரவு
எட்டு வருடங்களாக கண்ணம்மாவை பிரிந்து வாழும் பாரதி, விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு செல்கிறார். விவாகரத்து வேண்டும் என்றால் ஆறு மாதம் ஒன்றாக ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட, அந்த உத்தரவின்படி பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்று வசிக்கிறார்.
இரட்டை குழந்தை
கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகளாக பிறக்கும் லக்ஷ்மியும் ஹேமாவும் பிரிந்து வாழ்கின்றனர். லக்ஷ்மி கண்ணம்மாவுடனும், ஹேமா பாரதியுடனும் வாழ்கின்றனர். பாரதி, கண்ணம்மா வீட்டுக்கு வந்து சேர்ந்து இருப்பதனால், லக்ஷ்மியை பாரதி வீட்டுக்கு அனுப்பி வைக்கிறார்கள்.சில நாட்கள் லக்ஷ்மி பாரதி வீட்டில் இருக்க. பாரதியும் கண்ணம்மாவும் மட்டும் வீட்டில் தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
"இனி தமிழில்!".. ‘பத்தே செகண்ட்’ வீடியோ தான்.. Trend ஆகும் விஜய் டிவி வெளியிட்டுள்ள புதிய Promo!
வெளியே போகும் லக்ஷ்மி
அம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் லக்ஷ்மி யாரிடத்திலும் சொல்லாமல் தன் அம்மா வீட்டுக்கு வருகிறார். வீடு முழுவதும் தேடியும் கிடைக்காததால், லக்ஷ்மி காணாமல் போன விஷயத்தை அகில் சௌந்தர்யாவிடம் கூறுகிறார். அருகில் ஹேமா இருக்கும்போதே அண்ணி கிட்ட ஃபோன் செய்து கேட்கட்டுமா என்கிறார் அகில். அதை கேட்கும் ஹேமா, அண்ணி என்றால் அண்ணன் மனைவி தான என்று கேட்கிறார்.
சந்தேகத்தில் ஹேமா
அண்ணன் மனைவியை தான அண்ணி என்று கூப்பிடுவாங்க? உங்கள் அண்ணன் அப்பா என்றால், அப்பாவின் மனைவி தான் கண்ணம்மா ஆண்ட்டியா? என்று கேள்வி எழுப்புகிறார். இந்த கேள்வியை கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்கள். இந்த ப்ரோமோ தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் பல திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது. அம்மா யார் என்று தெரியாத ஹேமாவுக்கு அகில் கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இன்று எபிசோடில் என்ன நடக்க போகிறதோ என்று அனைவரும் ஆவலாக இருக்கின்றனர்.