"என் மனசே நொறுங்கி போச்சு!".. நடிகரின் கல்யாண செய்தியை கேட்டு VJ ரம்யாவின் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட் திரையுலகம் மற்றும் பாலிவுட் ரசிகர்கள் ஒரு ஏகோபோக கொண்டாட்டத்தில் இருப்பதற்கு ஒரு அழகான காரணம் பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான விக்கி கவுஷல் மற்றும் கத்ரினா கைஃப் இருவருக்குமிடையேயான திருமணம் வரும் டிசம்பர் 9-ஆம் தேதி நடக்கவிருப்பதுதான்.

Advertising
>
Advertising

ராஜஸ்தானில் உள்ள பார்வாரா - சவாய் மாதோபூர் சிக்ஸ் சென்ஸ் கோட்டை  (Six Senses Fort Barwara) ரிசார்ட்டில் இவர்களின் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில்,  இவர்களது மெஹந்தி, சங்கீத், ஹல்தி  உள்ளிட்ட விசேஷ நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் களைகட்டியுள்ளன.

இந்நிலையில் தான் நடிகை விஜே ரம்யா, தமது நெஞ்சம் உடைந்து நொறுங்கி போனதாக ஜாலியாக, ஒரு ரசிக மனோபாவ நிலையில் இருந்து தமது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை பதிவிட்டு பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் விக்கி கவுஷல் மற்றும் கத்ரினா இணைந்திருக்கும் படத்தையும் விஜே ரம்யா பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜே ரம்யா, ஆடை உள்ளிட்ட திரைப்படங்களில் அவரது கேஷூவலான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பலராலும் பாராட்டப்பெற்றார். இதேபோல் அண்மையில் வெற்றிமாறன் தயாரிப்பிலான சங்கத்தலைவன் திரைப்படத்தில் சமுத்திரகனியுடன் இணைந்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் விஜே ரம்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Heart broken VJ Ramya Reaction on Vicky Katrina Wedding

People looking for online information on தமிழ் சினிமா செய்திகள், தமிழ் செய்திகள், Katrina KaifVicky KaushalVicky Kaushal Katrina Kaif WeddingVicky Kaushal Katrina Kaif Wedding Venuekatrina kaif weddingKatrina Kaif WeddingKatrina Kaif Wedding DressKatrina Kaif Wedding PicturesKatrina Kaif Wedding NewsKatrina Kaif Wedding DateKatrin, Latest tamil news, Tamil cinema news, Tamil news, VicKat, VJ Ramya will find this news story useful.