''தமிழ்நாட்டில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க ?'' - அமைச்சர் விஜயபாஸ்கர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா உலக அளவில் மிகப் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் நாளை (23.03.2020) காலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசியம் தவிர மற்ற விஷயங்களுக்கு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகுறித்தும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் விஜயபாஸ்கர் Behindwoods Air நிகழ்ச்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ''கொரோனா வைரஸ் நிறைய பேரோட வாழ்க்கையே பொறட்டிப்போட்டிருக்கு. உலக அளவில் ஒரே நாளில் 500க்கும் மேற்பட்டோர் இறக்கும் நிகழ்வுகள் நடந்து வருகிறது. அந்த நிலைமை இந்தியாவிலும் தமிழகத்திலும் இல்லை என்பது ஆறுதலான விஷயம். ஆனா அந்த நிலை வந்துடக்கூடாது என்பது நாம அச்சத்தோடவும் பாதுகாப்போடவும் இருக்க வேண்டியது அவசியமானது.

தமிழ்நாட்டில் தற்போது வரை 7 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல்வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள். டிராவல் பண்ணிட்டு வந்தவங்களுக்கு நோய் பாதிப்பு இருக்கு. தமிழ்நாட்டில் டெல்லியில் இருந்து சென்னை வந்த ஒருவருக்காக 193 பேர் வரை தனிமைப்படுத்தியிருக்கிறோம். அதனால தான் நாங்க சொல்றோம் பயணத்தை தவிருங்கள் என்று.

சோசியல் ஸ்பெரட் எனப்படும் மொத்தமாக பரவுதல் தமிழகத்தில் இல்லை. அது வந்துடக்கூடாதுனு என்பது தான் எங்களோட போராட்டமா இருக்கு. ஆனா சென்ட்ரல் ஸ்டேஷன் போய் பார்க்குறப்போ சாரை சாரையா மக்கள் வடமாநிலத்தில் இருந்து வருவதை பார்க்கும் போது ஒரு ஹெல்த் மினிஸ்டரா எனக்கு கவலையாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.

''தமிழ்நாட்டில் கொரோனாவால் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்காங்க ?'' - அமைச்சர் விஜயபாஸ்கர் வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து விஜய்பாஸ்கர் பேட்டி | Health Minister Vijayabhaskar Speaks about Coronavirus in Tamilnadu

People looking for online information on Coronavirus, Covid-19, Tamilnadu, Vijayabhaskar will find this news story useful.