தளபதி விஜய் என்றால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்தப் படத்தை நம்பி பார்க்க வருவார்கள். கதையம்சம் உள்ள கமர்ஷியல் படங்களைத் தேர்ந்தெடுத்து தனது கேரியர் க்ராஃபை நேர்த்தியாக தொடர்கிறார் விஜய். அவ்வகையில் இளைய தளபதியிலிருந்து தளபதியாக சீரான மாற்றம் அடைந்தவர்,
விஜய்யின் ரசிகர்களின் அவர் மீது பேரன்பும், பெரும் மரியாதையும் கொண்டுள்ளனர். விஜய் பற்றிய எந்த செய்தியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள். அவர் அறிமுகமான நாளையா தீர்ப்பு படம் முதல் சமீபத்திய பிகில் வரை ஒவ்வொரு படத்திலும் அவரது நடை, உடை, நடனம், நடிப்பு என எல்லாமே ரசிகர்களுக்கு கிராண்ட் ட்ரீட்.
விஜய் தனது பிறந்த நாளை ஜூன் 22 ஆம் தேதி (இன்று) கொண்டாடுகிறார், பொதுவாக அவரது ரசிகர்கள் அதை பெரிய விழாவாக கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் சமீபத்தில் விஜய் வெளியிட்ட அறிக்கையில், தனது பிறந்த நாளில் பெரிய கொண்டாட்டங்கள் எதுவும் நடைபெறக் கூடாது என்று கண்டிப்பாக அறிவித்துள்ளார், மேலும் இச்சூழலில் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக அவரது ரசிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்கள்.
விஜய்யின் 64-வது படம் 'மாஸ்டர்'. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார், எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் பேனரில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். இப்படத்துக்கு இசை அனிருத்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்க்கு தனது பிறந்த நாளை வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவு செய்தார். அதில் அவர் கூறியிருப்பது, 'மாஸ்டர் உண்மையில் ஒரு மறக்க முடியாத நினைவு ... என்னால் எந்த ஒரு நாளையும் தனியாகப் பிரித்துச் சொல்ல முடியாது ... உங்களுடன் செலவழித்த ஒவ்வொரு கணமும் என்றென்றும் நினைவில் பொக்கிஷமாக இருக்கும் ... .. உங்களுக்கு என் நன்றி .. பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா......ஐ லவ் யூ #HBDTHALAPATHYVijay’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்