கடந்த 2018-ஆம் ஆண்டு டிஸம்பர் மாதம் 21-ஆம் தேதி வெளியான படம் கேஜிஃப். இதில் சாண்டல்வுட்டின் Rocking Star என்று புகழப்படும் நடிகர் யாஷ் நடித்திருந்தார். இந்தப் படம் இந்தியளவில் பெரிய ஹிட் அடித்து, நடிகர் யாஷுக்கு பரவலான ரசிகர்களை உருவாக்கித் தந்தது. KGF படத்தை இயக்கியவர் பிரசாந்த் நீல்.
இதுவரை வெளி வந்த கன்னடத் திரைப்படங்களிலேயே மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட் அடித்து, மெகா வசூல் செய்த படம் என்ற சாதனையை கேஜிஎஃப் செய்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக உருவாக்கி உள்ளார் பிரசாந்த் நீல். லாக்டவுன் முடிந்த பின் செப்டம்பர் 23-ஆம் தேதி படத்தை வெளியிடுவோம் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
இன்று (ஜூன் 4) இயக்குனர் பிர்சாந்த் நீல் தன் பிறந்த நாளை கொண்டாடுகிறார். கேஜிஎஃப் சேப்டர் 2 #KGFChapter2 என்ற ஹாஷ் டாக்கை ரசிகர்கள் தற்போது உருவாக்கி டிவிட்டரில் டிரெண்ட் ஆக்கி வருகின்றனர். ட்விட்டரில் பிரசாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் கேஜிஎஃப் போன்ற ஒரு அற்புதமான திரைப்படத்தை இயக்கியதற்கு நன்றி கூறியும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்
கேஜிஎஃப் 2 படத்தின் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முழு வீச்சில் நடக்கிறது, 22 நாட்கள் கடைசிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில், ஷூட்டிங் தொடங்கிவிட்டால் விறுவிறுப்பாக படமாக்கம் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். ஜூன் மாத தொடக்கத்தில் அரசாங்க அனுமதியின்படி படப்பிடிப்பு நடத்தப்பட்டால், ஏற்கனவே முடிவு செய்தபடி செப்டம்பர் மாதத்தில் படத்தை வெளியிட்டுவிடலாம் என படக்குழுவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.