HBD காஜல் அகர்வால் - பிறந்த நாளில் வெளியான அட்டகாசமான போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

காஜல் அகர்வால் 2004 ஆம் ஆண்டு பாலிவுட்டில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் என்ற படத்தில் நடித்தார். ஆனால் இந்தப் படம் 2008-ம் ஆண்டுதான் வெளியானது. அதன்பின் சில படங்கள் நடித்த பிறகு, ராஜமெளலி இயக்கத்தில் மஹாதீரா என்ற தெலுங்குப் படத்தில் நடித்தார். அந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு மாவீரன் என்ற பெயரில் வெளியான போது காஜல் அகர்வாலுக்கு நிறைய தமிழ் ரசிகர்கள் உருவாகினர். அதன் பின் அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் வெற்றிகரமாக நடித்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவியுடன் அவர் நடித்த கோமாளி என்ற படம் பெரிதும் பாராட்டப்பட்டது.

 

இன்று காஜல் அகர்வால் தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார், மொசகல்லு என்ற தெலுங்குப் படத்தில் அவர் தற்போது நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஷ்ணு மஞ்சு காஜலின் ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் காஜலின் பிறந்த நாள் பரிசாக படக்குழுவினர் சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு நடிக்க, காஜல் அனு என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கிறார்.  இந்தத் திரைப்படம் உலகின் மிகப் பெரிய ஐடி மோசடியை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் சில போஸ்டர்கள் லாக்டவுனுக்கு முன்னால் வெளியிடப்பட்டன. தற்போது வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. 

மொசகல்லு படத்தை ஜெஃப்ரி கீ சின் (Jeffrey Gee Chin) இயக்குகிறார். ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் மற்றும் 24 ஃப்ரேம்ஸ் ஃபேக்டரி பேனரில் விஷ்ணு மஞ்சு தயாரிக்கிறார். இப்படத்தின் இசை அமைப்பாளர் நிவாஸ். கேமராவை ஒளிப்பதிவாளர் ஷெல்டன் சாவ் மற்றும் எடிட்டிங்  கெளதம் ராஜு கையாளுகிறார். 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Hbd Kajal agarwal Mosagallu team release special poster

People looking for online information on Kajal Aggarwal, Lockdown, Manchu Vishnu, Mosagallu will find this news story useful.