ஹர்சா போக்லேவை கவர்ந்த பிரித்வி ராஜின் BEHINDWOODS பேட்டி..! ட்வீட் செய்து நெகிழ்ந்த ஹர்சா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹர்ஷா போக்லே, பல ஆண்டுகளாக உலகளாவிய கிரிக்கெட் ஒளிபரப்புத் துறையில் மிகச்சிறந்த ஆளுமைகளில் ஒருவராக திகழ்பவர்.

Advertising
>
Advertising

ரிச்சி பெர்னாட்டுக்கு பின் கிரிக்கெட்டின் குரலாக அறியப்பட்டவர் ஹர்சா. வர்னணையாளர்களில் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆடாத சில நபர்களில் இவரும் ஒருவர். 1992 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு முந்தைய இந்திய கிரிக்கெட் தொடரின் போது ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்தால் அழைக்கப்பட்ட முதல் இந்திய வர்ணனையாளர் இவர் தான். 

2011 ஆம் ஆண்டு இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசத்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில், சைமன் ஹியூஸ், நவ்ஜோத் சிங் சித்து, சுனில் கவாஸ்கர், டோனி கிரேக் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் இடம்பெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் குழுவில் இடம்பெற்றவர்.

2013 ஆம் ஆண்டில், சச்சின் டெண்டுல்கர் தனது இறுதி டெஸ்ட் போட்டியை மும்பை வான்கடே மைதானத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடிய போது இறுதி நேர்காணலை இயன் பிஷப் உடன் இணைந்து நடத்தியவர். கிரிக்கெட் போக சுற்றுலா சம்பந்தப்பட்ட டிஸ்கவரி சேனலின் "TRAVEL INDIA WITH HARSHA BHOGLE" நிகழ்ச்சியும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.

இந்நிலையில் நடிகர் பிரித்வி ராஜ் நமது Behndwoods Cold சேனலுக்கு அளித்த பேட்டியில், "சினிமா துறைக்கு வராமல் இருந்திருந்தால் வேறு எந்த துறையை தேர்ந்தெடுத்து இருப்பீர்கள்?" என கேட்ட கேள்விக்கு "சுற்றுலா பதிவராக (Travel Vlogger)  அல்லது கிரிக்கெட் வர்ணனையாளராக ஆகி இருப்பேன்" என்றும், "தனது கனவு வேலை என்றால் அது ஹர்சா போக்லே செய்யும் வேலை தான்" என்றும் நடிகர் பிருத்வி ராஜ் கூறினார். 

இந்த Behindwoods வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்த ஹர்சா போக்லே, "ஆஹா, நன்றி பிரித்வி ராஜ், நீங்கள் ஒரு சிறந்த தேர்வு செய்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன்!" என டிவிட் செய்து நெகிழ்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Harsha Bhogle shared a prithiviraj interview behindwoods video

People looking for online information on Behindwoods, Harsha Bhogle, Prithviraj Sukumaran will find this news story useful.