இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் கல்யாண நாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் வைரல் அடித்து வருகின்றன.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல்வேறு டாப் நட்சத்திரங்களின் படங்களில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அண்மையில் இவரது இசையில் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியான பாடல் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் கடந்த ஞாயிறு அன்று, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். அவரது மனைவி மற்றும் மகளுடன் வீட்டில் சிம்பிளாக திருமண நாளை கொண்டாடிய, ஹாரிஸ் குடும்பத்தினர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் அடித்து வருகிறது. இதையடுத்து ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Tags : Harris Jayaraj, Harris Jayaraj Family