வெளிநாட்டில் துணிவு படம் பார்த்த ஹாரிஸ் ஜெயராஜ்.. அஜித் ரசிகர்கள் வழங்கிய நினைவுப்பரிசு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தினை வெளிநாட்டில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கண்டு களித்துள்ளார்.

Advertising
>
Advertising

H.வினோத், இயக்கத்தில் அஜித் நடிப்பில்  'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023)  அன்று  திரையரங்குகளில் வெளியானது. 

வங்கிகள் மற்றும் பங்கு சந்தை தொடர்பான 'துணிவு' படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது  குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது. துணிவு படத்தின் மலேசியா ரிலீஸ் உரிமத்தை பிரபல மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் கைப்பற்றி ரிலீஸ் செய்துள்ளது. மலேசியாவில் மிகப் பெரிய வெற்றியை துணிவு படம் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மலேஷியா நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கச்சேரிகள் நடத்தி வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், துணிவு படத்தினை மலேசியா வினியோகஸ்தர் & அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார். மேலும் படம் முடிந்த பிறகு மலேசியா நாட்டின் அஜித் ரசிகர் மன்றம் சார்பில் நினைவுப் பரிசு ஒன்றையும் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வழங்கி உள்ளனர்.

என்னை அறிந்தால் படத்தின் சத்யதேவ் கதாபாத்திரத்தின் லுக் உடன் ஹாரிஸ் ஜெயராஜ் புகைப்படம் அடங்கிய டிசைனர் ஃப்ரேம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.

தொடர்புடைய இணைப்புகள்

Harris Jayaraj watched Thunivu Movie in Malaysia

People looking for online information on Ajith Kumar, Harris Jayaraj, Thunivu will find this news story useful.