SK21 : முதல் முறையாக 'SK' படத்தில் இணையும் 'பிரபல' இசையமைப்பாளர்?.. வெளியான அசத்தல் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த ஆண்டு, டாக்டர் மூலம் பெரிய ஹிட் கொடுத்த நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், அடுத்ததாக 'டான்' திரைப்படம், கடந்த மே 13 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

Also Read | Breaking: விஜய் சேதுபதிக்கு Farewell … PAN இந்தியா ரிலீஸ்… ‘விடுதலை’ பற்றி வெளியான Exclusive தகவல்கள்

இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லீயின் உதவி இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கி இருந்த டான் திரைப்படத்தில், சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட ஏராளாமானோர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.

அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், இதற்கு அடுத்தபடியாக அயலான், அனுதீப் இயக்கத்தில் ஒரு படம், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் என அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.

"SK21"

இதில், ரங்கூன் படத்தை இயக்கி இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள SK21 படத்தை, நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து, சோனி நிறுவனம் தயாரிக்க உள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை, நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி , நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர், கமலுடன் இருக்கும் புகைப்படமும் வெளியிடப்பட்டது. இதனையடுத்து, இந்த படத்தில் நாயகியாக சாய் பல்லவி நடிக்கவுள்ளது பற்றியும், ராஜ்கமல் நிறுவனம், கடந்த மே 9 ஆம் தேதியன்று அதிகாரபூர்வமாக தகவலை வெளியிட்டிருந்தது. தொடர்ந்து, மற்ற SK21 படக்குழு குறித்து, விரைவில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.

இசையமைப்பாளர் யார்?

இந்நிலையில், SK21 படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது பற்றி, அசத்தலான தகவல் ஒன்று பற்றி, நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து வெளியாகி உள்ளது. அதன்படி, சிவகார்த்திகேயன் - ராஜ்குமார் பெரியசாமி ஆகியோர் இணையவுள்ள படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், முதல் முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகார்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தி லெஜண்ட், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட சில திரைப்படங்களுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார்.

Also Read | நடிகை சமந்தாவுடன்.. 'Hridayam' இசையமைப்பாளர் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ.. இணையத்தில் 'செம' வைரல்

தொடர்புடைய இணைப்புகள்

Harris Jayaraj to compose music for SK 21 Sources

People looking for online information on Harris Jayaraj, Sivakarthikeyan, SK21, SK21 Movie Updates will find this news story useful.