’லெஜண்ட்’ படத்தின் முதல் சிங்கிள்…. ஆரம்ப வரிகளைப் பகிர்ந்த ஹாரிஸ் ஜெயராஜ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணா நடிக்கும் லெஜண்ட் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அவர் இசையில் முதல் சிங்கிள் நாளை வெளியாகிறது.

Advertising
>
Advertising

“Poster-லயே.. Action இப்படி ஃபயர் ஆகுது”…. விஷால் படத்தின் premiere தேதியை அறிவித்த ஜி தமிழ்!

சினிமாவில் கால்பதிக்கும் லெஜண்ட்…

சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படங்கள் மூலம் தமிழக மக்களிடையே பிரபலம் அடைந்தவர் அந்த கடைகளின் அதிபர் அருள் சரவணன். இதைத் தொடர்ந்து தற்போது கதாநாயகனாக அடியெடுத்து வைத்துள்ளார். அவர் நடிப்பில் ஜேடி –ஜெர்ரி விளம்பர பட இயக்குனர்கள் இயக்கும் புதிய படத்துக்கு ’லெஜண்ட்’ என்றே பெயர் வைக்கபப்ட்டுள்ளது. இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இதற்கு முன்னர் உல்லாசம் மற்றும் விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள். அதன் பிறகு நூற்றுக்கணக்கான விளம்பர படங்களை இயக்கியவர்கள். சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களையும் அவர்களே இயக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணிக் கலைஞர்களோடு பிரம்மாண்டமாய்…

லெஜண்ட் படத்தில் சரவணாவுக்கு ஜோடியாக ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MOSALO MOSALU…

ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகின. மோஷன் போஸ்டரில் ஹாரிஸ் ஜெயராஜின் இசை கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் நாளை வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த பாடலின் ஆரம்ப வரிகளை இப்போது படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர். Mosalo mosalu (மொசலோ மொசலு) என்று அந்த பாடல் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனோடு வெளியான போஸ்டரும் இப்போது கவனத்தைப் பெற்றுள்ளது.

”திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்.. ஒருத்தன் வந்தா ”…. வெளியானது மாஸ் பீஸ்ட் mode பாடல்!

தொடர்புடைய இணைப்புகள்

Harris jayaraj shared the starting lyrics of legend movie single

People looking for online information on Harris Jayaraj, JD, Legend Movie, Saravanan Arul will find this news story useful.