'விக்ரம்' படத்தில் வரும் THROWBACK வின்டேஜ் பாடல் ஹாரிஸ் ஜெயராஜ் ப்ரோகிராம் பண்ணதா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "எந்த ஒரு தாயும் தன் குழந்தைக்கு ஆபத்துனா.. ".. நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் மிரட்டும் TRAILER!

தமிழகத்தில் முன்னணி விநியோக நிறுவனமான ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிட்டுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.  அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும்  பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர்.

விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.

இந்நிலையில் விக்ரம் படத்தில் இடம்பெற்ற வத்திக்குச்சி பத்திக்கிச்சி பாட்டு இடம்பெற்றுள்ளது. இந்த பாடல் 1995 ஆம் ஆண்டு வெளிவந்த அசுரன் படத்தின் பாடலாகும். இந்த பாடலை ஆதித்தன் இசையமைத்திருந்தார்.

இந்த அசுரன் படத்தில் மன்சூர் அலிகான் கேரக்டர் பெயர் வீரபத்திரன். இந்த வீரபத்திரன் கேரக்டர் கேப்டன் பிரபாகரன் படத்தின் வீரபத்திரன் கேரக்டரின் Spin off ஆகும்.

விக்ரம் (2022) படத்திலும் கமல்ஹாசனின் கதாபாத்திரம் விக்ரம் (1986) படத்தின் ஸ்பின் ஆஃப் ஆகும். இந்த காரணத்திற்காக வத்திக்குச்சி பத்திக்கிச்சி பாட்டு Tribute ஆக விக்ரம் படத்தில் இடம்பெற்றுள்ளது.

இது குறித்து இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் டிவிட்டரில் புதிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், "இந்த வின்டேஜ் வத்திக்குச்சி பத்திக்கிச்சி பாட்டு வைரலாகி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பாடலை ஆதித்தன் இசையமைக்க, நான் நிரல் (Programme) அமைத்தது. இந்த பாடல் 1995 ஆம் ஆண்டு VGP ஸ்டுடியோவில் பதிவு செய்யப்பட்டது." என கூறியுள்ளார்.

Also Read | 'விக்ரம்' பார்த்துட்டு, 'டில்லி' கார்த்தி ட்வீட்.. சூர்யா குறித்தும் சொன்னது என்ன தெரியுமா.?

தொடர்புடைய இணைப்புகள்

Harris Jayaraj Programmed Asuran Movie Vintage Song Vikram Lokesh Kanagaraj

People looking for online information on Asuran Movie, Harris Jayaraj, Lokesh Kanagaraj, Vikram, Vintage Song will find this news story useful.