அடடே …ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மியூசிக் ஆல்பமா? இவங்களும் இருக்காங்களா? மாஸ் UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாக உள்ள புதிய இசை ஆல்பம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது

Harris jayaraj muken rao new music album update
Advertising
>
Advertising

“மிரட்டும் டிரைலர்!.. அசுரன், ஜெய்பீம் நடிகரின் இயக்கத்தில் 'டாணாக்காரன்' ..

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ். நடிகர்கள் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ் என பல்வேறு டாப் நட்சத்திரங்களின் படங்களில் இவர் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். அண்மையில் இவரது இசையில் துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து வெளியான பாடல் ரசிகர்களை கவர்ந்தது.

Harris jayaraj muken rao new music album update

கௌதம் ஹாரிஸ் கூட்டணி….

மின்னலே படத்தின் மூலமாக இசையமைப்பாளராக அறிமுகமான ஹாரிஸ் ஜெயராஜ் , அதன் பின்னர் கௌதம் மேனன் இயக்கிய காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றியது. இந்த படங்களின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன. வாரணம் ஆயிரம் படத்துக்கு பிறகு கௌதம் மேனன் ஏ ஆர் ரஹ்மானுடன் சில படங்களில் பணியாற்ற ஆரம்பித்தார். பின்னர் இந்த கூட்டணி என்னை அறிந்தால் மற்றும் துருவ நட்சத்திரம் ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றினர்.

ஹாரிஸின் ஆஸ்தான இயக்குனர்கள் கூட்டணி…

கௌதம் மேனன் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி போலவே வேறு சில இயக்குனர்களோடும் ஹாரிஸ் தொடர்ந்து பணியாற்றி பல வெற்றி பாடல்களைக் கொடுத்துள்ளார். அதில் முக்கியமாக ஜீவா – ஹாரிஸ் ஜெயராஜ், கேவி ஆனந்த் – ஹாரிஸ் ஜெயராஜ்ம் ஷங்கர் – ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான படங்களும் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன.  2k கிட்ஸ் இளைஞர்களின் விருப்பத்துக்குரிய இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கிறார் ஹாரிஸ்.

லெஜண்ட்டில் ஹாரிஸ் ஜெயராஜ்…

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்த அந்நிறுவன உரிமையாளர் ’லெஜெண்ட்’ சரவணன் அருள் தற்போது ஜே.டி.ஜெர்ரி லெஜண்ட் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

முதல் முறையாக இசை ஆல்பம்…

இந்நிலையில் இப்போது ஹாரிஸ் ஜெயராஜ் முதல் முறையாக தனி இசை ஆல்பம் ஒன்றுக்கு இசையமைக்க உள்ளார். இந்த ஆல்பம் பற்றிய போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த ஆல்பத்தில் குக்வித் கோமாளி புகழ் அஸ்வினும், பிக்பாஸ் பிரபலமும் பாடகருமான முகேன் ராவும் இணைந்துள்ளனர். இதனால் இந்த ஆல்பம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

#jamesinott: புனீத் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி நியூஸ்… பிரபல ஓடிடி கொடுத்த update

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Harris jayaraj muken rao new music album update

People looking for online information on ஹாரிஸ் ஜெயராஜ், Harris Jayaraj, Harris jayaraj new music Album, Muken rao will find this news story useful.