ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் புதிய படம்.. மியூசிக் உரிமத்தை வாங்கிய பிரபல நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: 'சரவணா ஸ்டோர்ஸ்'  தயாரிப்பில் அந்நிறுவன உரிமையாளர் சரவணன் நடிக்கும் 'தி லெஜண்ட்' படத்தின் இசை உரிமம் விற்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

தீயாய் பரவும் பீஸ்ட் படத்தின் புதிய தமிழ் போஸ்டர்.. சன் பிக்சர்ஸ் வெளியிட்ட புது அப்டேட்!

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் முன்னணி நடிகைகளுடன் நடித்த அந்நிறுவன உரிமையாளர் ’லெஜெண்ட்’ சரவணன் அருள் தற்போது ஜே.டி.ஜெர்ரி (ஜோசப் டி.சாமி மற்றும் ஜெரால்ட் ஆரோக்கியம்) இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி முன்னனி நடிகர்கள் நடித்த பல விளம்பர படங்களை இயக்கியவர்கள். இவர்கள் ஏற்கனவே அஜித் - விக்ரம் நடித்து அமிதாப் பச்சன் தயாரித்த உல்லாசம் படத்தையும், விசில் படத்தையும் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக, பாலிவுட் மாடல் ரித்திகா திவாரி நடிக்கிறார். நகைச்சுவை நடிகர்கள் யோகிபாபு, ரோபோ சங்கர், பிரபு, நாசர், மயில்சாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மறைந்த நடிகர் விவேக்கும் இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்துக்கு ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ISC ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி ரூபன் எடிட்டிங் பணியை செய்ய, அனல் அரசு சண்டைக்காட்சி இயக்குனராக பணிபுரிகிறார்.

இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன் ஹாரிஸின் பின்னணி இசையில் மோஷன் போஸ்டர் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசை உரிமம் Think Music நிறுவனத்துக்கு விற்கப்பட்டுள்ளது. இதை பிரத்யேக போஸ்டருடன் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்துக்கு வைரமுத்து, சிநேகன், பா. விஜய், சிநேகன், கார்க்கி ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர். ராஜூ சுந்தரம், பிருந்தா, தினேஷ் நடன இயக்குனராக பணிபுரிகின்றனர்.

கார்த்தி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங்.. பிரபல நடிகை பகிர்ந்த வைரல் BTS போட்டோஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Harris Jayaraj Legend Movie Music Rights Bagged by Think Music

People looking for online information on Harris Jayaraj, JD, Legend Movie, Prabhu, Saravanan Arul, Think Music will find this news story useful.