BREAKING : சூப்பர் ஹிட் பட இயக்குநருடன் இணையும் ஹரிஷ் கல்யாண் - யார் தெரியுமா ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரீஸ் கல்யாண் நடிப்பில் வெளியான படம் 'இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்'.  இந்த திரைப்படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கினார். சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இதனையடுத்து ஹரிஷ் கல்யாண் தற்போது 'தனுசு ராசி நேயர்களே' என்கிற படத்தில் நடித்துவருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். இதனையடுத்து அவர் 'விக்கி டோனர்' என்கிற ஹிந்தி படத்தின் தமிழ் ரீமேக்கான தாராள பிரபு என்கிற படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் படம் குறித்து தகவல் தெரியவந்துள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி 'சொல்லமாலே', ரோஜாகூட்டம், பிச்சைக்காரன் படங்களின் இயக்குநர் சசி இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தை மாதவ் மீடியா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறதாம். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது.

சசி தற்போது ஜி.வி.  பிரகாஷ், சித்தார்த் இணைந்து நடிக்கும் 'சிவப்பு மஞ்சள் பச்சை' என்கிற படத்தை இயக்கிவருகிறார்.  இந்த படத்துக்கு சித்துகுமார் என்பவர் இசையமைத்துள்ளார்.

Harish Kalyan to act in Director Sasi's film

People looking for online information on Harish Kalyan, Sasi will find this news story useful.