‘பிக்பாஸ்’ ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த பட அப்டேட்? டைரக்டர் & புரொடியூசர் இவங்களா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரீஷ் கல்யாண் தமிழில் ஜாலியான படங்களில் நடித்து வரும் இளம் நடிகர்.

முன்னதாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரீஷ் கல்யாண் தனக்கே உரிய இயல்பினால் பிரபலமடைந்தார். அவருடைய படங்களுக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் தற்போது இருக்கின்றனர்.

தொடர்ந்து அவருடைய படங்களை அவர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி முன்னதாக நடிகர் ஹரீஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர், பிக்பாஸ் போட்டியாளர் ரைசாவுடன் ஹரீஷ் கல்யாண் இணைந்து நடித்த இந்த படத்திற்கு யுவன் இசையமைத்திருந்தார். இளன் இயக்கியிருந்தார்.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஹரீஷ் கல்யாணுக்கு ரொமாண்டிக் படங்கள் கைகொடுப்பதாக பேச்சுகள் எழுந்தன. இதனை அடுத்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு உள்ளிட்ட திரைப்படங்களில் ஹரீஷ் கல்யாண் நடித்தார். இதனைத் தொடர்ந்து பிரியா பவானி ஷங்கருடன் இணைந்து ‘ஓ மணப் பெண்ணே’ படத்தில் நடிக்கிறார். இதே போல் ‘ஸ்டார்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படத்தை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி ஈராஸ் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றிய executive producer அருண் விஸ்வா தயாரிப்பிலான புதிய படம் ஒன்றில் ஹரீஷ் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணை அறிமுக இயக்குனர் பரத் இயக்குவார் என்று தெரிகிறது. எனினும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாக காத்திருக்கலாம்.

ALSO READ: ‘விழிப்பா இருங்க!’.. ஆபாச பட வழக்கில் கணவர் கைதான பின், ஷில்பா ஷெட்டி பகிர்ந்த ‘முதல்’ பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Harish kalyan next debut director bharath producer Arun viswa

People looking for online information on Harish Kalyan will find this news story useful.