திருமணமாகி ஒரு மாதம்.. வீட்டு வாசலில் நின்று மனைவியுடன் ஹரிஷ் கல்யாண் பகிர்ந்த வைரல் PHOTO!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண்,  திருமணம் முடிந்த பிறகு ஒரு மாத கொண்டாட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

பிக்பாஸ்  முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

தற்போது ஹரிஷ் கல்யாண் 'டீசல்' என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

மேலும் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

சிலநாட்களுக்கு முன் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்தார்.நடிகர் ஹரிஷ் கல்யாண், சென்னை திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் மஹாலில் திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் முடிந்த பிறகு ஒரு மாத கொண்டாட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது மனைவி நர்மதாவுடன் வீட்டு வாசலில் நின்று எடுத்த புகைப்படமாக இந்த புகைப்படம் அமைந்துள்ளது. ஹரிஷ் கல்யாண், "ஒரு மாதம் கொஞ்சம் குறும்பு நிறைய காதல்" என தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
.

 

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan Narmada Udayakumar First Photo after Marriage

People looking for online information on Harish Kalyan, Narmada Udhayakumar will find this news story useful.